உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

வாடகைக் காரின் இருபக்கக் கதவுகளிலும் ‘டி’ என்னும் எழுத்துப் பெரிய அளவில் உள்ளது. அது வாடகைக் கார் என்பதைக் குறிக்கும். காரின் தலையில் பச்சைநிற விளக்கு எரிந்தால் அதில் ஆளில்லை என்பதைக் காட்டும். சிவப்புநிற விளக்கு எரிந்தால் வாடகைக்குச் செல்கிறது என்பதைக் காட்டும்!" என்ற விளக்கம் எங்களுக்குக் கிடைத்தது.
'வாடகைக் கார் விவகாரம் இருக்கட்டும். இப்போது பாதாள இரயில்வே பயணத்தைக் கவனிப்போம்' என்று விரைவுபடுத்தினேன்.
வரைந்து செல்லத் தேவையில்லை, வேலு! இரவு ஒரு மணிவரை ஒடும் இந்த இரயில்; மற்றப் போக்குவரத்தும் அந்நேரம்வரை இருக்கும். அதற்குள் மாஸ்கோவைப் பலமுறை சுற்றி வந்துவிடலாம் பாதாளத்தில்’ என்று அமைதிப்படுத்தினார் அம்மையார். இதற்குள் கால்கள் எங்களை இரயில்வே நிலையத்திற்குள் இழுத்துக்கொண்டு போய்விட்டன. அங்கு ஒரே கூட்டம். வேடிக்கை பார்த்து நிற்கும் கூட்டம் அன்று. விரைந்து செல்லும் கூட்டம் ; வெளியே விரையும் கூட்டம். உள்ளே போகும்வழிகள் இரண்டு இருந்தன. ஒவ்வொன்றையும் மறித்து, ஒவ்வொரு கட்டை இடுப்பளவு இருப்பதைக் கண்டோம். ஒவ்வொன்றின் பக்கத்திலும் ஓர் இயந்திரம் இருந்தது. இரயில்வே நிலையங்களில் நம் எடையைக் காட்ட வைத்திருக்கும் இயந்திரம்போல் இருந்தன. அவை அவற்றைப் பார்த்தபடியே கட்டையின் அருகில்சென்றோம். குமாரி கன்னா முன்னே