பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கொஞ்சம் மூக்காலும் சங்கீதம் வந்து விடும்! இக் காரணங்களால் இவர் கண்வராக நடித்த போது நாடகம் பார்க்க வந்திருந்த ஜனங்கள் இவரை 'ஹிஸ்' பண்ணினார்கள், அதற்கு பிறகு இவர் நாடகமாடுவதை விட்டு விட்டார்.

திரு. C. பாலசுந்தர முதலியார்

இவர் பல வருடங்களாக சுகுண விலாச சபையிலும் இவர் உத்தியோகத்திலிருந்த செக்ரடேரியட்ட நாடக சபையிலும் அநேக முறை நடித்தவர். வேடம் பூணுவதிலும் மற்றவர்களுக்குப் போடுவதிலும் இவர் நல்ல சமர்த்தர். இதில் முன்னே சொன்ன வெங்கடாசலையா அவர்களுக்கு இரண்டாவதாக கூறலாம். இவர் பன்முறை மனோகரா நாடகத்தில் வசந்தனாக நன்றாய் நடித்தவர். நடுவயதிலேயே 1939 வது வருஷம் காலகதி யடைந்தார்.

திரு. வேல் நாயர்

இவர் மலையாள தேசத்தைச் சேர்ந்தவர். மலையாளியாயிருந்தும் தமிழ் நன்றாய் திருத்தமாய் பேசுவார். அன்றியும் சம்ஸ்கிருதமும் படித்தவர் நல்ல நடிகர். தமிழில்தான் நடிப்பார். அப்படி நடிக்கும்போது ஆங்காங்கு சில சம்ஸ்கிருத பதங்களையும் உபயோகிப்பார். இவர் தன் நாடகக் கம்பெனியூடன் தமிழ் நாடெங்கும் பன்முறை சுற்றி வந்திருக்கிறார், அக் காலத்தில் முக்கிய நாடகங்களுடன் நான் எழுதிய மனோகரா, கள்வர் தலைவன் முதலிய நாடகங்களை பன்முறை நடத்தி யிருக்கிறார், சற்றேறக்குறைய வாரத்தில் ஒருமுறையாவது எனது நாடகங்களில் நடித்திருக்கிறார். இவரைப் போல் எனது நாடகங்களை அநேக முறை நடத்திய நாடகக் கம்பெனிகளே கிடையாது எனக் கூறலாம். இதனால் இவருக்கு வருவாய் அதிகமாகக் கிடைத்தது. எனக்கும் ராயல்டி அதிகமாய் கிடைத்தது. இவர் தன் கம்பெனியை வெகு விமரிசையாய் நடத்தி வந்தார். மற்ற கம்பெனிகளில் சாதாரணமாய் நடிகர்களுக்கு சம்பளம் சரியாகக் கொடுப்பதில்லை என்னும் கஷ்டம் இவருடைய கம்பெனியில் கிடையவே கிடையாது. சில காலம் காலஞ்சென்ற M. கந்தசாமி முதலியார் இவரது கம்பெனியாருக்கு உபாத்தியாயராய் இருந்து நடிப்புக் கலையை கற்பித்ததை நான் அறிவேன், இவர் நடிகர்களை சரியாக நடத்தி வந்தபடியால் அவர்கள்