பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104 ♦ நான் கண்ட பெரியவர்கள்


கேட்டுக்கொண்டார். என்னிடம் வந்த கி.வா.ஜ. அக்கடிதத்தைக் கேட்க நான் தர மறுத்துவிட்டேன். சுவாமிகள் கைகளைப் பலமுறை தட்டி, அதை எப்படியாவது வாங்கித் தருமாறு சைகை காட்டினார். சுவாமிகளைக் காப்பாற்ற நினைந்த கி.வா.ஜ. கெஞ்சிக் கூத்தாடி அக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டுபோய்ச் சுவாமியிடம் கொடுத்துவிட்டார்.

இந்த மெளனத் துறவி யார் என்று தெரியுமா? அவர்தான் கவியோகி சுத்தானந்த பாரதியார் என்று பலராலும் போற்றப்பெற்றவர். இப்பெருமக்களுடைய புற வாழ்க்கை வேறு; அக வாழ்க்கை வேறு. புறத்தே வெளுத்து அகத்தே கருத்திருந்தனர். இந்த மனிதரைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பேசுவதற்கு ஒரு காரணம் உண்டு. அதனை இங்கே அடுத்துக் குறித்துள்ளேன்.

வெளியே வந்து காரில் ஏறியதும், கி.வா.ஜ. ‘இந்த ஊரில் கவிஞர் ஒருவர் வாழ்கிறார். அவரைப் பார்த்து விட்டுப் போகலாம்’ என்றார். அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று எனக்குத் தெரிந்துவிட்டதால், காரைத் திருப்பிக் கவிஞர் வீட்டின் முன்னர் நிறுத்தினேன். இருவரும் இறங்கி வீட்டின் முன்னர் இருந்த திண்ணையில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தோம். வீட்டில் உள்ளவர்கள் எங்களை யார் என்று அறிந்துகொண்டு, இதோ வந்துவிடுவார் என்று சொன்னார்கள், உள்ளே சென்றவர்கள், கவிஞரை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பி, நாங்கள் வந்திருந்ததை அறிவித்திருந்திருக்க வேண்டும்.

எழுந்த கவிஞர், குவித்த கைகளுடன் வீட்டின் உள்ளேயிருந்து வந்தார்; வாய் நிறைய ‘வாங்க வாங்க. இப்படியே உட்காருங்கள்’ என்றார். இரண்டு திண்ணைகளிலும் நாங்கள் எதிர் எதிராக இருந்தமையின் வாயிற் படியிலேயே கவிஞர் குத்துக்காலிட்டு அமர்ந்து