பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சர். கந்தையா வைத்தியநாதன் (இலங்கை) ♦ 173


கொண்டிருந்தது, இந்தியாவிலிருந்து புதிதாகப் போன எனக்குச் சற்றுப் புதுமையையும், மனச் சங்கடத்தையும் உண்டாக்கிற்று. கூட்டம் தொடங்கியவுடன் அவரவர்கள் சுருட்டை அமர்ந்திருக்கும் நாற்காலியின் கை வைக்கும் இடத்தில் வைத்துவிடுவார்கள். கூட்டம் முடிகின்றவரை யாரும் எடுத்துப் பிடிப்பதில்லை. ஆனாலும் எரியும் சுருட்டிலிருந்து மெல்விய புகை மேல்நோக்கி வந்துகொண்டே இருக்கும். இரண்டு நாட்கள் பேசி முடித்தேன். சர் கந்தையாதான் தலைமை தாங்கினார். ஒவ்வொரு நாளும் திருவாசகம்பற்றி நான் இரண்டு நாட்கள் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்வார். கடைசியில் பேசிக்கொள்ளலாம் என்று தட்டிக் கழித்தேன். காரணம், சுருட்டுப் புகை மண்டலத்தில் திருவாசகம் பேசுவதற்கு என்னவோபோல் இருந்தது. அதை வெளியில் சொல்ல முடியாமல் தட்டிக் கழித்துவந்தேன். மூன்றாம் நாள் சொற்பொழிவு முடிந்தவுடன், சர் கந்தையா அவர்கள் என்னை கேட்காமலேயே அடுத்த இரண்டு நாட்கள் திருவாசகம்பற்றிப் பேசுவேன் என்று விளம்பரம் செய்துவிட்டார்.

வேறு வழியின்றி மறுநாள் திருவாசகம் பேச ஆரம்பித்தேன். என்னுடைய வாழ்நாளில் அதுவரை கண்டிராத அதிசயத்தைக் கண்டேன். மாபெரும் அதிர்ச்சிக்குள்ளாயினேன். தமிழகத்தில் எத்தனையோ இடங்களில் திருவாசகம் பேசியுள்ளேன். பிறர் பேசக் கேட்டும் உள்ளேன். ஆனால், அந்தப் பேச்சுக்கள் பேசும் என்னையோ கேட்பவர்களையோ ஒன்றும் செய்ததில்லை. இந்த அனுபவத்தில் வளர்ந்த நான் சைவ மங்கையர் கழகத்தில் அதிர்ச்சியடைந்ததில் வியப்பொன்றுமில்லை. அதிர்ச்சிக்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். எரியும் சுருட்டை வைத்துக்கொண்டிருந்த அந்த முன் வரிசைக்காரர்முதல் கடைசிவரைத் தேம்பி அழும் ஒலி