பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காஞ்சி மகாப்பெரியவர் ♦ 215


அழகர்சாமி, நான் ஆகிய மூவரும் உடனே சங்கர மடத்துக்குப் புறப்பட்டோம்.

அப்பொழுது மகாப்பெரியவர் முற்றிலும் உடல்நிலை தளர்ந்து, கால்களை நீட்டி ஒரு ஸ்டூலின் மேல் வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார். அவர் எதிரே ஒரு மேம்பாலம் போல ஓர் அமைப்பைச் செய்திருந்தனர். தரிசிக்க வருகின்ற பக்தர்கள் அதன்மேல் ஏறி அதன் உச்சிக்குச் சென்று, நேர் கீழே படுத்திருந்த மகாப்பெரியவரைத் தரிசனம் செய்துவிட்டுக் கீழிறங்கிச் சென்று விடுவர். நூற்றுக் கணக்கானவர்கள் இவ்வாறு சென்று வந்தனர்.

மகாப்பெரியவரிடம் ஏதேனும் சொல்லவேண்டும் என்று நினைக்கின்றவர்களில் அனுமதி கிடைத்த ஒரு சிலர் மட்டும், பாலத்தின் மேற்செல்லாமல், பெரியவர் படுத்திருந்த சாய்வு நாற்காலியின் எதிரே பத்தடி தூரத்தில் நின்று தம் குறைகளைக் கூறிக்கொண்டிருந்தனர். திரு.செந்தில்நாதன் மடத்திற்கு மிகவும் வேண்டியவராதலால் எங்களையும் அழைத்துக்கொண்டு பெரியவரின் எதிரே நிற்கவைத்தார்.

சில விநாடிகளுக்கெல்லாம் திரு. செந்தில்நாதன் மகாப்பெரியவரை நோக்கி, இங்குக் கூறப்பெறும் வார்த்தைகளை மட்டும் கூறினார். “பெரியவாளுக்கு நமஸ்காரம், அ.ச. பெரியபுராணம் அச்சிட விரும்புகிறார். அந்தப் பணி நிறைவேறப் பெரியவாளின் ஆசியை நாடி வந்துள்ளார்” என்று கூறி முடித்தார். அ.ச. என்றுதான் கூறினாரே தவிர, என் பெயரைக்கூடக் நண்பர் கூறவில்லை. ஆனாலும் ஓர் அதிசயம் நடந்தது. எப்படிப் பெரியவர்கள் ஆணையிட்டார்கள் என்று யாருக்கும் தெரியாது. பெரியவர்களின் பக்கத்தில் பணிபுரிவதற்காகக் கரிய நிறமுடைய ஒருவர் நின்றுகொண்டிருந்தார். திடீரென்று சுவரோரம் அடுக்கியிருந்த பட்டுக்களில் ஒரு