பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88 ♦ நான் கண்ட பெரியவர்கள்


இந்தப் பெட்டியில் கையை வைத்து ஒன்றை எடு” என்றார். ‘சிவராமா இது என்ன கொடுமை! நீங்கள் கிளிஜோசியக்காரனும் அல்லர். நான் ஜோசியக் கேட்க வந்தவனும் அல்லன்’ என்று சொல்லிச் சிரித்தேன். இதற்குள் எங்களைச் சுற்றி ஐம்பது பேருக்குமேல் கூடிவிட்டனர். அதுபற்றியே கவலைப்படாத சிவராமன் அவர்கள் “சம்பந்தா! நான் சொல்லுகிறபடி செய் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்றார். வேறு வழியில்லாமல், ஆண்டவனை மனத்தில் நினைத்துக் கொண்டு, கண்களை மூடிக்கொண்டு ஒரு ஒலிநாடாவை எடுத்து அவரிடம் தந்தேன். ஒலிபெருக்கியை காதில் மாட்டிக் கொண்டு நாடாவை இயந்திரத்தில் சுழலவிட்டார்.

அவர் முகம் மலர்ந்துவிட்டது. “சம்பந்தா! நீ அதிர்ஷ்டக்காரன். நீ கேட்டது கிடைத்துவிட்டது” என்று விளக்கம் சொல்ல ஆரம்பித்தார். சற்றும் எதிர்பாராத ஓர் அதிசயம் அன்று காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் காலை எட்டுமணியளவில் நடைபெற்றுவிட்டது. பல ஆண்டுகளாக நான் தேடிய வேதத்தின் ஒரு பகுதி இப்பொழுது கைமேல் கிடைத்துவிட்டது.

கருட சயனம் என்ற ஒரு யாகம் ஆயிரத்தெட்டு (1008) செங்கற்களைக் கருட வடிவில் புதைத்து அதன் வயிற்றுப் பகுதியில் இருந்துகொண்டு செய்யப்பெறுவதாகும். யாகத்தைப் புரியும் ஆச்சாரியன் வயிற்றுப் பகுதியில் அமர்ந்துவிட்டான். பணம் தந்து யாகம் நடத்தும் தலைவன் வெளியே இருந்துகொண்டு ‘யாகத்தைத் தொடங்கலாமா?’ என்று கேட்கிறான். அப்பொழுது ஆச்சாரியன் பின்வருமாறு விடைகூறுகிறான். “ஏனைய யாகங்களில் உருத்திரனுக்கு அவிஸ் இல்லாததுபோல இந்த யாகத்திலும் அவனுக்கு அவிஸ் கிடையாது. ஆனால் மிகக் கொடியவனாகிய ருத்திரன் இந்த யாகம் நிறைவேறாமல் ஏதாவது குழப்படி