உயிர்க்காட்சிகளும் பொருட்காட்சிகளும் வுயிர்க்காட்சிச் சாலையார் கொண்டாடுகின்றனராம்! இச்சாலையை நடத்தும் பிரிட்டிஷ் விலங்கியற் கழகத்தின் செயலாளராக அமர்ந்திருப்பவர் புகழ் பெற்ற விஞ்ஞானியும் பேரறிஞருமான சூலியன் ஹக்ஸ்லி ஆவர். விலங்குகளைக் கொடுமையாக நடத்து வதைத் தடுக்கும் எஸ்.பி.சி.ஏ.கழகத்தாரும் இக் காட்சிச் சாலையின் ஆட்சி முறையில் பங்கெடுத்துக் கொள்ளுகின் றனர். சான்பிரான்சிஸ்கோ சான்பிரான்சிஸ்கோவிலுள்ள உயிர்க்காட்சிச் சாலை 'கோல்டன் கேட்' பூங்காவனத்துள் இருக்கி றது. இந்தச் சாலை ஒரு மிலியன் டாலர், அதாவது 47] லட்சம் ரூபாய் மூலதனத்தோடு தொடங்கப் பட்டதாம். இச்சாலையிலுள்ள பலவகையான உயி ரினங்களை மிகச் சிறு உருவத்தில் நெகிழிப்பொருள் கள் (Plastics), ரப்பர் ஆகியவற்றில் செய்து இச் சாலையார் விற்கின்றனர். சிட்னி சிட்னியிலுள்ள உயிர்காட்சிச் சாலை அந்த ககரத்துக்கு அணித்தாயுள்ள ஒரு தனித்தீவில் உள்ளது. உலகிலேயே மிக அழகிய இவ்வுயிர்க் காட்சிச் சாலைக்குச் செல்லுவதற்குப் படகு களும் தனி டிராம் போக்கு வரவும் உண்டு. குழந்தைகள் இந்தச் சாலைக்குள் மோட்டாரிலும் ரயிலிலும் பிரயாணஞ் செய்யலாம். குரங்கு சர்க்கசுக்குக் கட்டணம் கிடையாது. இச்சாலையில் களைப்பாறுவதற்குரிய, சிறு அறைகள் மட்டும் 50 இடங்களில் இருக்கின்றன. இவ்வுயிர்க்காட்சிச் சாலை அமைப்புக்கு 18,000 பவுன், அதாவது ரூபாய்
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/101
Appearance