உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0€ நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் 2,34,000 செலவாயிற்றம். உடலில்லாத ஒரு மீன், சில மாதங்கட்கு முன் சிட்னித் துறைமுகத்தருகே பிடிக்கப்பட்டு, அது இப்பொழுது அச்சாலையின் மீன் காட்சிப் பகுதியில் ஒரு தனிக்குளத்தில் பாது காக்கப்பட்டு வருவதாக ஒரு நண்பர் எழுதி யுள்ளார். 13 மெல்பர்ன், பெர்த் ஆகிய மற்ற ஆஸ்திரேலிய நகரங்களிலும் நல்ல உயிர்க்காட்சி நிலையங்களைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. விலங்கு களின் படங்களைத் தபால் தலைகளில் ஆஸ்திரேலி யர் அச்சிடுகின்றனர். பிற கண்டங்களில் இல்லாத பல நூறு வகை அரிய உயிரினங்கள் (ஊர்வன, நடப்பன, நீர்வாழ்வன ஆகிய யாவும்) இருப்ப தாலும், அம்மக்களுக்கு விலங்குகளிடம் உள்ள பற்றின் காரணத்தாலும், உயிர்நூல் அறிஞர் பலர் அங்கே இருப்பதாலும், ஆஸ்திரேலியாவில் உயிர்க் காட்சிச் சாலைகள் தனிச் சிறப்புடன் விளங்கு கின்றன. நியூயார்க் நியூயார்க்கிலுள்ள ப்ராங்ஸ் உயிர்க்காட்சிச் சாலையார் அச்சாலைக்குப் புதிதாய் வந்துள்ள உயிரினங்கள் எவை எவை என்பதை - நம் நாட்டில், கன்னிமரா, சென்னைப் பல்கலைக் கழக நூல் நிலையங்கள் புதிய நூல்கள் சேர்ப்பதை அறிவிப்பது போல் - அவற் றின் படங்களுடன் வாரந்தோறும் பத்திரிகை களில் வெளியிடுகின்றனர். பொருட்காட்சிச் சாலைகள் இனிப் பொருட்காட்சிச்சாலைகளைக் கவனிப்போம். ங்கிலத்தில், "Exhibition, Museum" என்ற இரு