உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்க்காட்சிகளும் பொருட்காட்சிகளும் . 37 சொற்களுக்கும் தனித்தனிக் கருத்துக்கள் இருந் தும், தமிழில் இவ்விரண்டையுமே பொருட்காட்சிச் சாலை என்று கூறுகின்றனர். எக்சிபிஷன் என்பது குறிப்பிட்ட ஒரு நோக்கத்துடன் திருவிழாவாகச் சில நாட்களுக்கு மட்டும் வியாபாரத்துக்காக நடத் தப்படுவது. ஈண்டு, நாம் குறிப்பிடும் பொருட்காட் சிச்சாலை மியூசியம் என்பதே ஆகும். முற்காலத்தில் வழங்கிய பொருள்களையும், இக்காலத்தில் ஒவ் வொரு நாட்டிலும் மூலை முடுக்குகளில் பரவிக்கிடப் பனவற்றையும் ஒரே கட்டிடத்தில் ஒருங்கே பார்க்க இயல்வதற்குரிய இடமே மியூசியம் ஆகும். இவற்றை நேரிற் பார்த்தவுடன், குறிப்பாகச் சிறுவர் சிறுமி யர் மனங்களில் ஒரு கருத்து ஆழமாய்ப் பதிந்து விடு கிறது. ஆசிரியர்கள் மாணவர்களை இங்கே அடிக் கடி அழைத்துச் செல்லுவதும் பல மேலைநாடு களின் நிகழ்ச்சி முறைகளில் ஒன்றாகும். பொருட் காட்சிச் சாலைகளுக்கு அந்நாடுகளில் மிகப் பெரிய கட்டிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபைக்கூட்டங்கள் நடந்த பாலே டீ சாலியோ என்ற அரண்மனையில் முன்னர் ஒரு பிரெஞ்சுப் பொருட் காட்சிச் சாலைதான் இருந்ததாம். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் கல்லூரி களும் தமக்கெனப் பொருட்காட்சிச்சாலைகளை வைத்துக் கொண்டுள்ளன. சுவீடன் அரண்மணையிலுள்ள பொருட்காட்சிச் சாலை மிக வியப்பைத்தருவதாகும். அந் நாட்டின் பண்டைப் பெருமையை அது உணர்த்துகின்றது)