98 பிராஹா நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் காலஞ்சென்ற செக் தலைவர் மசாரிக் என்பவர் நினைவாக, பிராஹாவில் ஒரு பொருட்காட்சிச்சாலை உள்ளது. மசாரிக்க பயன் படுத்திய பொருள்கள், கையால் எழுதிய கடிதங்கள், உடுத்த ஆடைகள், அவருக்கு விருப்பமான புத்தகங்கள், அவர் செய்த பிரயாணங்களை விளக்கும் படங்கள், அவருடைய நாட்குறிப்பு இவற்றை எல்லாம் அங்கே கண்டேன். நம் நாட்டின் தந்தை, மகாத்மா காந்தியடிகளின் நினைவாகப் பொருட்காட்சிச்சாலை அமைக்கும் போது, நாம் இதைப் பின்பற்ற வேண்டும். ஏழு மலைகட்கிடையே அமைந்திருக்கும் அழகிய தலைாக ரான் பிராஹாவில், வேறு பல சிறந்த பொருட் காட்சிச் சாலைகளும், அகன்ற சாலைகளில் பெரிய கட்டிடங்களில் இருக்கின்றன. பாரிஸ் பொருட்காட்சிச் சாலைகள் மிகுதியாயுள்ள பாரிஸ் நகரில், லுவர் பொருட்காட்சிச் சாலை (LouvrG Museum) தனிச்சிறப்புடையது. அங்கேயுள்ள சிலை களின் பெருமையையும் வேலைப்பாட்டின் அருமை யையும் நேரிற் காணாதவர் உணர்வது எளிதன்று. இவற்றின் சிறப்பைக்கண்டு நாள்தோறும் பல அறிஞர்கள் இறும்பூது எய்துகின்றனர். உருவச் சிலைகளில், மனித உறுப்புக்கள் எவ்விதக் குறையு மின்றி, இயற்கைபோல் அமைந்திருப்பது, அக் காலச் சிற்பக் கலைஞரின் கைத்திறத்தைத் தெளி வாகக் காட்டுகிறது. வெர்சே அரண்மனையில் பிரெஞ்சுமன்னர்கள் பயன் படுத்திய பொருள்கள் எல்லாம் நன்னிலையில் பாது
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/104
Appearance