உயிர்க்காட்சிகளும் பொருட்காட்சிகளும் காக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ்நாட்டு வரலாற்றைக் கூறும் ஒப்புயர்வற்ற சித்திரங்கள் பலவற்றை இங்கே காணலாம். உலக மக்களில் மிகுதியானவர் செல்லும் பொருட்காட்சிச்சாலை இதுவேயாகும். லண்டன் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சிசாலை (British Museum) மிக விரிவானது, இங்கே 40 நூறா யிரம் நூல்கள் உள்ளன. அண்மையில், இமயமலை மீது ஏற வந்த பிரிட்டிஷ் குழுவினர் அப்பகுதியி லுள்ள 2,000 வகையான செடிகளையும் பல்லிகளை யும் பாப்பாத்திப்பூச்சிகளையும் அச்சாலைக்கு அனுப் பினர். போர் தொடங்கியவுடன் பிரிட்டிஷ் அரசிய லார் உடனே செய்த பல செயல்களில், லண்டனி லுள்ள பொருட்காட்சிச்சாலைகளை ஆபத்துக்குறை வான இடங்களுக்கு அப்புறப்படுத்தியதும் ஒன் கும். இவற்றிலிருந்து பிரிட்டிஷார் பொருட்காட்சி களை எவ்வாறு போற்றுகின்றனர் என்பதை அறிய லாம். உலகத்தின் பல பகுதிகள் - சிறப்பாக, இந் தியா, ஜாவா - பற்றிய காட்சிகள் பொதிந்து கிடக் கும் இப்பொருட்காட்சிச் சாலைக்கு நிகரானது வேறெங்கும் இல்லை.உலகின் நடுநாயக நகரில், நமது கலைச்செல்வங்கள் நன்கு பேணப்பட்டு, நம் கலையின் சிறப்பை உலகமக்கள் அனைவரும் அறியும் நிலை வில்,பெரும் செலவில் பாதுகாக்கப்பட்டு வருவதைப் பற்றி நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். ஓவியப்படங்கள், லண்டன் டிரபால்கச் சதுக் கத்தின் அருகே, தேசீய சித்திரசாலை (National Art Gallery) யில் வைக்கப்பட்டுள்ளன.
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/105
Appearance