உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்க்காட்சிகளும் பொருட்காட்சிகளும் 101 காட்சிச்சாலைகள் அமைத்து, அவற்றில் தாம் சென்ற இடங்களின் நினைவாகச் சிற்சில பொருள் களைப் பேணி வருவதும் ஈண்டுக் குறிப்பிடத் தக்கது. சீனரும் தாம் குடியேறிய நகரங்களிலெல்லாம், சைனாடவுன் என்ற பகுதிகளில், சீன ஆலயங் களும் சீனக்கலைப் பொருட்காட்சிகளும் அமைத்தி ருப்பதோடு, அங்குச் செல்லுவோரிடையே சீன மொழியையும் சீன உணவுகளையும் பரப்புகின்ற னர். ஆஸ்திரேலியா மெல்பர்ன் என்னும் அழகிய ஆஸ்திரேலிய நகரத்தில்,(நாள்தோறும் வாழ்வில்) பயன்படுத்தப் படும் விஞ்ஞானப் பொருட்காட்சிச்சாலை (Museum of Applied Science) உள்ளது. இங்கே ஆஸ்திரேலி யாவிலுள்ள எல்லாத் தொழிற்சாலைகளும் எல்லா வகை இயந்திரங்களும் சிறு உருவங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மின்சாரப் பொத்தானை அழுத்தியவுடன், அத்தொழிற்சாலை களும் இயந்திரங்களும் வேலை செய்கின்றன! அவற்றை இயக்கிக்காட்டி விளக்கம் அறிவிக்கும் ஆற்றலுடையோரும் அங்கே இருக்கின்றார்கள். இதுவன்றோ பொருட்காட்சிச் சாலை ! இந்தியா 1. நம் நாட்டில், கலைத்துறையிலும் புதிய நூற்றாண்டு தொடங்கியுள்ளது. நம் நாட்டின் தொன்மைக் கேற்பப் பெரியதொரு பொருட் காட்சிச் சாலையைத் தலைநகராகிய டில்லியில் நிறுவவும், பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையிலும் இந்தியாவில் பல சிறிய பொருட்காட்சிச் சாலை