உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பலநாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் "புதிதாக ஒரு நாட்டுக்குப் போகுமுன் அ நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களை நன்றாகக் கேட்டுத் தெரிந்துகொள் என்பது கன்ப்யூசியஸ் என்ற சீனப் பெரியார் வாக்கு. "ரோமர்களைப் போலவே ரோமாபுரியில் நடந்துகொள் என்ற பழமொழியும் இவ்வாக்கைத் தழுவியதே. ஆயினும் நான் புதிய நாடுகளுக்குச் சென்ற பின்னரே, அந் தந்த நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களை அறிய நேர்ந்தது. அவைகளையே இக் கட்டுரையில் குறிப் பிடுவேன். ஒரு நாட்டு மக்களைப் பற்றிப் பொதுவாகச் சொல்லுவது சரியன்று. ஒரு நாள், லண்டனில், ஸ்ட்ராண்டு சாலையில், ஸ்காட்லந்துக்காரர் இருவர் என்னைப் பார்த்து, நான் இந்தியன் என்பதை அறிந்துகொண்டு, மகாத்மா காந்தியடிகளின் மர ணத்தைப்பற்றி என்னிடம் துக்கம் விசாரித்தனர். பேசிக்கொண்டே சிறிது நடந்தோம். அது பகல் உணவு நேரமாக இருந்ததால், அருகிலிருந்த ஓர் உணவுச் சாலைக்குள் நான் சென்றேன்; அவர்க ளும் என்னைப் பின் தொடர்ந்தனர். ஒரே மேசை யருகிலேயே என்னுடன் அவர்களும் அமர்ந்தார் கள். இவ் விருவருமே நான் முதன் முதலாகக் கண்ட ஸ்காட்சுக்காரர் ஆவர். ஸ்காட்லந்துக்கு போனதில்லை. ஸ்காட்சுக்காரர் கணக்கில் வல்லுநர் என்றும், மிகச் சிக்கனமானவர் என்றும் கேள்விப் பட்டிருந்தேன். அந்த ஸ்காட்சுக்காரரைக் கண்டவுடன் நான் பல்