பலநாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் 105 மூன் அறிவிப்பின்றி விருந்தினர் வருவதால், தம் திட்டங்கள் சீர்குலைந்து போகும் என்பதே அவர் கள் கருத்தாகும். மேலும் அது தனிப்பட்டவரின் உரிமையைக் கட்டுப்படுத்துவதாகுமென்றும் மேலை நாட்டவர் எண்ணுகின்றனர். உரிமையைப் பேணுதல் ட் ரயில் பிரயாணம் செய்யும்போது, டிக்கட் சோதிப்பவர், உறங்குபவரைத்தட்டி எழுப்பினால், அது அவருடைய உரிமையில் தலையிட்டதாகு மென்று நினைக்கும் அமெரிக்கர் தம் நாட்டு ரயில் களில், ஒவ்வொரு பிரயாணியின் இடத்துக்கு எதிரி லும், டிக்கட்டைப் பிடித்துக்கொள்ளக்கூடிய ஒரு கைப்பிடியை வைத்திருக்கிறார்கள். பிரயாணிகள் ரயிலில் ஏறியவுடன், டிக்கட்டை அவ்விடத்தில் செருகி விடுகிறார்கள். டிக்கட் சோதிப்பவர் டிக்கட்டு களை ஒவ்வொன்றாக எடுத்துச் சரிபார்த்து, அவற் றில் துளையிட்டுவிட்டு, மீண்டும் அங்கேயே வைத்து விடுகிறார். இந்த உரிமை மனப்பான்மையால் மேல்நாடு களில் ஒருவர் செயலில் மற்றொருவர் தலையிடுவ தில்லை. மகன் திருமணத்தை முடிவு செய்வதில், அவன் பெற்றோர் தலையிடுவதில்லை. எந்தச் செய லிலும் ஒருவனுடைய திட்டத்தில் அவன் நண்பர்கள் குறுக்கிடுவதில்லை. கணவனுக்கு வரும் கடிதத்தை மனைவி பிரிப்பதில்லை. மனைவிக்கு வரும் கடிதத் தைக் கணவனும் பிரிப்பதில்லை. குழந்தைகட்கு மேனாட்டார்கொடுக்கும் உரிமை எல் லையற்றது. "அமெரிக்காவைப்பற்றி எனக்கு வியப் பைத் தருவது, அங்கே பெற்றோர்கள் தம் குழந்தை
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/111
Appearance