106 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் கட்குக் கீழ்ப்படிந்து நடக்கும் முறையே ஆகும் என்று வின்ட்சர் கோமான் ஒரு முறை விளையாட்டாகச் சொன்னார். பிரயாணத்தின்போது, குழந்தைகள் துன்பப்படாமலிருப்பதற்காகப் பிரிட்டனில் அவர் களைச் சிறு பிரம்புக் கட்டிலில் போட்டு, அக்கட்டி லைக் கணவனும் மனைவியுமாகப் பிடித்துக்கொண்டு செல்லுவர். தொழிற்சிறப்பு செய்வது சில குறிப்பிட்ட தொழில்களைச் இழிவு என்ற கேடுதரத்தக்க மனப்பான்மை வேறு நாடுகளில் இல்லை. வேலை செய்வதில் உயர்வுதாழ்வு கிடையாது; எல்லா வேலையும் கடவுளின் தொண்டு; து மக்களை உயர்த்துவது என்பதே அவர்கள் கருத்தாகும். பற்பல நாகரிக முன்னேற்றங்கள் இருந்தும், துணி துவைத்தல், வீடு சுத்தம் செய்தல், பற்றுத் தேய்த்தல், அசுத்தங்களை அகற்றுதல் கிய வேலைகளைப் பிறர் உதவியின்றி ஒவ்வோர் மெரிக்கனும் தானே செய்கிறான். ஒரு ஜெர்மானியரும் அமெரிக்கரும் தம் வேலையைத் தராத ஊக்கத்தோடும் நல்ல மனநிலையோடும் செய்கின்றனர். அவர்கள் வேலையில் துன்பப்படு வதாகச் சொல்லுவதில்லை. தம்வேலையில் பெருமையை உணருகிறார்கள். அவர்கட்குத் தன் னம்பிக்கை உண்டு. பிறரையே நம்பி வாழ்பவன் வெற்றி காண்பதில்லை என்ற உண்மையை அவர்கள் அறிந்தவர்கள். உழைப்புக்குத்தான் பயன் என்ப தை அமெரிக்கர் தம்குழந்தைகட்கு வலியுறுத்துகின் றனர். கடவுளைக்கேட்டு விரும்பும் நலன்களை அடை யலாம் என்று சிறுவர்கட்குக் கற்பிப்பது தவறு என்பது அவர்கள் கருத்து. அமெரிக்கச் சிறுவர்
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/112
Appearance