உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் 107 சிறுமியர் தம் ஏழாம் ஆண்டு முதலே, நாள்தோறும் சிறிது நேரம், ஏதாவதொரு சிறு வேலையைச் செய்து, தம் சிறு செலவுகளுக்குத் தாமே பொருள் தேடிக்கொள்ளுகின்றனர். இத்தகைய தம் வரு வாயிலிருந்து, குழந்தைகள் கிறிஸ்துமசுக்குத் தம் பெற்றோர்களுக்கு அன்பளிப்புப் பொருள்கள் வாங்கிக்கொடுக்கின்றனர். நான் பார்த்த அமெ ரிக்கக் குடும்பங்களிலெல்லாம் இவ்வாறு தங்கட்குத் தங்கள் குழந்தைகள் அன்பளிப்பாய்த் தந்த பொருள்களை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் என்நண்பர்கள் எனக்குக் காட்டினார்கள். பொழுதுபோக்கு வேலைகள் . ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா இங் கெல்லாம் வசிப்பவர்கள் எல்லோரும் தாம் நாள் தோறும் செய்யும் வேலைகளிலிருந்து மாறுதலடைய ஏதாவதொரு பொழுதுபோக்குத் தொழில் (Hobby) வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தொழில்க ளுள் தபால் முத்திரைகளைச் சேர்ப்பது எங்கும் பரவியுள்ளது. பல நாட்டு நாணயங்களைச் சேர்ப்ப வரும் உளர். பலவகைக் கற்களைச் சேர்த்தல், பெரி யோர்களின் கையெழுத்துக்களைப் பெறுதல், நிழற் படங்களைத் தொகுத்தல், பலவகையான தீப்பெட்டி களைச் சேர்த்தல், பலவகையான பீங்கான்களைச் சேர்த்தல் போன்ற பல பழக்கங்களும் உண்டு. இந்தப் பொழுது போக்கு வேலைகள், இப்போது பலருக்கு முழுநேர வேலையாகவும், வாழ்க்கையில் அதே ஒரு பித்துப்போலவும் ஆகிவிட்டன. பல வகைக் கற்களைச் சேர்ப்பதில் அமெரிக்கருக்கு உள்ள பித்தை அறிந்த ஐப்பானியர், ஹிரோ சீ மாவில் 88-8 மெரிக்கர் போட்ட