உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் அணுக்குண்டிலிருந்து சிதறிய சிறு சிறு சில்களை ஒரு சில் 5 டாலர் (ரூபாய் 23-12-0) விகிதம் அமெ ரிக்கருக்கே விற்றனராம். இதுவரை, அமெரிக்கர் தாம் போட்ட அணுக்குண்டையே 5 லட்சம் டால ருக்கு வாங்கிக் கொண்டிருப்பதாக ஒரு பத்திரிகை கேலியாக எழுதி யிருந்தது. புதுவழக்கம் ற பிறந்த நாள் விழா, திருமண ஆண்டு விழா, கண்பர்களை முதன் முதலிற் கண்ட நாள் விழா இவற்றை யெல்லாம் வாழ்த்துச் செய்திகள் அன்ப ளிப்புகள் அனுப்பியும், விருந்துகள் நடத்தியும் கொண்டாடுவது பல நாடுகளில் இப்போது புது வழக்கம் ஆகிவிட்டது. பிறர்க்கு உதவி செய்தல் வாழ்க்கையில் தம்மைவிடத் தாழ்ந்த நிலையி லுள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற நல்லெண்ணம் நம்மைப்போல எல்லா நாட்டினருக் கும் உண்டு. ஆனால், அவர்கள் தனித்தனியாக அறம் செய்யாமல் பொது நிலையங்கள் வாயிலாக இயக்க முறையில், பெரும் அளவில் திட்டமிட்டுச் சமூக நன்மைக்கான பணிகள் செய்கிறார்கள். இதற்குச் சில எடுத்துக்காட்டுகள் கூறலாம். சுவீ டன், சுவிஸ் மக்கள் செஞ்சிலுவைச் சங்கத்துக்குப் பெரும் பொருள் கொடுத்திருக்கிறார்கள். போரால் தஞ்சம் என்று அவர்கள் நாட்டுக்கு வந்த பல நூறு யிரம் ஜெர்மனியருக்கும் பிற நாட்டவருக்கும் அவர்கள் எல்லா உதவிகளையும் செய்தனர். அமெரிக்கர் ஞாயிற்றுக்கிழமை தோறும், கிறித் தவக் கோயில்களில் பொருள் சேர்த்து நூறாயிரக் கணக்கான உணவுப் பார்சல்களைப் பாழடைந்த $