பலநாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் 109 ஜெர்மனிக்கு ஆகாய விமானத்தின் மூலம் கொடை யாக அனுப்புகிறார்கள். அமெரிக்க நாட்டு மடாதி பதிகள் பற்பல கல்லூரிகளை உலகெங்கும் நிறுவி யுள்ளனர்.ஒய்.எம்.சி.ஏ. என்னும் கிறித்தவ இளைஞர் சங்கம் போன்ற பல இயக்கங்கள் வாயி லாகவும் பெருந்தொண்டு செய்கின்றனர். பிறரை இகழாமை H . கை நான் சென்ற நாடுகளில், எக்காரணத்தா லாவது ஒருவனுக்கு உடலின் ஒரு பகுதி- கால், கை, அல்லது வேறு உறுப்புப் - போய்விட்டால், அதற்காக அவரைப் பிறர் நேரிலோ மறைவிலோ இகழ்வதில்லை. அவர் ஊக்கமிழந்து விடும்படியாக அவரிடம் ஒருவரும் நடந்து கொள்ளுவதில்லை. அவ ருடைய இழந்து போன உடலுறுப்பைப்பற்றி ஒன் றும் பேசாமல், மற்றச் செய்திகளைப் பற்றியே அவ ரிடம் பேசுவார்கள். " ஐயோ! உனக்குக் போய்விட்டதே!' என்று அவரிடம் அழுவதில்லை. போரில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புக்களை இழந்த பல நூறாயிரம் பேர், எல்லா உறுப்புக்களு முடையவர்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் விஞ்ஞான உதவியால் மகிழ்ச்சியுடனும் திறமையும் னும் செய்வதை, ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஒவ்வொரு நாளும் கண்டேன். பெண்கள் நிலை ஆடவர் செய்யும் எந்த வேலையையும் பெண்டிருஞ் செய்கின்றனர். பெரும்பாலும் எல்லாநாடுகளிலும் பெண்களுக்குத் தக்க மதிப்புக் கொடுக்கப்படுகின் றது, பெருஞ்செல்வர்களும் தமது அலுவலகத்திலுள்ள
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/115
Appearance