110 நான் கண்ட வெளிகாட்டுக் காட்சிகள் பணிப்பெண்களையும் மதிப்பாகவே நடத்துகின்ற னர். மனம் ஒத்தாலன்றிச் செல்வம் பதவி இவை காரணமாக அங்கே திருமணம் நடைபெறுவதில்லை. அம்மகளிர் வாழ்க்கைமுறை பற்றிய நூல்களைக் கற் பதோடு, பல இடங்களுக்கும் சென்று பொது அறி வையும் வளர்த்துக் கொள்ளுகிறார்கள். குறைந்த உறக்கம் ஆண் பெண் என்ற வேறுபாடுகளை வெளிநாட் டார் ஏற்றுக்கொள்ளாதது போலவே, இரவு பகல் என்ற கடவுளின் வரையறையையும் அமெரிக்கரும் பிரெஞ்சுக்காரரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பகலில் தான் செய்யவேண்டும் என்றோ, அல்லது பகலில் செய்யக் கூடாத இரவு வேலை என்றே எந்த வேலைக்கும் வரையறை கிடையாது. "மணி,நேரம் என்பது மக்களின் கற்பனை; இரவும் பகலும் ஈச னுக்கு ஒன்றே என்பது அவர்கள் கோட்பாடு. இதனால் பிற நாட்டவர்களில் பெரும்பான்மையோர் நம்மை விடக்குறைவாகவே உறங்குகின்றனர். உறங்கும் முறை . உறக்கத்தைப் பற்றி மற்றொன்று குறிப்பிட வேண்டும். உறங்கும் சிறிது நேரத்தில், பிறர் தொல்லையின்றி மேல்நாட்டார் உறங்குகின்றார்கள். நியூயார்க் நகரின் ஒரு பகுதியாகிய குயின்சில் முப்ப தாவதுமாடியில் குடியிருக்கும் ஒரு நண்பர் வீட்டுக்கு நான் சென்றபோது, அவருடைய ஆறு மாதக் குழந்தை தனிப் படுக்கை அறையில் உறங்கியது எனக்குப் பெரும் வியப்பாயிருந்தது.
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/116
Appearance