உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுவழி நாடு வேண்டும் மின்சாரம் கிடைப்பதற்காக ரத்தைப் பங்கீடு செய்கின்றனர். 15 மின்சா சுவீடன்தான் உலகிலேயே மிகவும் வடக்கே யுள்ள. நாடு. ஆகையால், இங்குள்ள காலநிலை மிகவும் வியப்பானது. இங்கே மேமாதம் தொடங்கி, மூன்று மாதங்கள் இளவேனிற்காலமாக இருக்கும். இக்காலத்தில் சுவீடனில் சூரியன் அல்லும் பகலும் ஒளி வீசுகின்றது. அதாவது மே மாதத்தில் தோன் றும் சூரியன் சூலை மாதத்தில்தான் மறைகிறது. இதனால் இந்த நாட்டுக்கு நள்ளிரவுச் சூரியன் நாடு என்ற பெயர் வழங்குகின்றது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 30-ம் நாள் இரவில், சுவீடிஷ் மக்கள் சொக்கப்பனை கொளுத்தி, நள்ளிரவுச் சூரியனுக்கு கல்வரவு கூறி மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர்.

நவம்பர் டிசம்பர் மாதங்களில் இங்கே மூடுபனிக் காலம் இருக்கும். அப்போது உறைந்த பனிக்கட்டி யில் ஓடி விளையாடுவது இந்நாட்டவருக்கு மிகவும் இன்பம் தருவதாகும். சுகாதாரம் சுவீடனில், பொதுவாகச் சுகாதாரம் மிக நல்ல முறையில் இருக்கிறது. சுவீடன் மக்கள் தம் உட லைப் பேணுவதில் கவனமாயிருக்கின்றனர். 10,000 உடற் பயிற்சிக்கூடங்கள் இங்கே உள்ளன. சுவீடன் மக்களின் சராசரி உயரம் 5 அடி 9 அங்குலம். அவர்கள் நல்ல உடலமைப்பு உடைய வர்கள். அவர்களுடைய சராசரி வயது 70 (நம் நாட்டில் 27). இக்நாட்டவர் தமிழ்நாட்டிலும் பல நகரங்களில்