உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் கண் மருத்துவச் சாலைகளும் பிறவும் நிறுவியிருக் கின்றனர். உலகிலேயே மிகச்சிறந்த மருத்துவர் களும் மருத்துவச் சாலைகளும் மருத்துவத் தொழிற் கருவிகளும் சுவீடனில் உண்டு. ஆகாய விமானப் படையெடுப்பு நேர்ந்தால், அப்போது நோயாளி களைக் காப்பாற்றுவதற்காக மலைகளுக்குள் தங்கு மிடங்கள் (Shelters) கட்டி, அம்மலைகளின் மீது மருத்துவச் சாலைகள் அமைத்திருக்கின்றனர். ஆபத்துக் காலத்தில் 'லிப்ட்' என்ற கருவிமூலம் நோயாளிகள் அவ்விடங்களுக்குக் கொண்டுபோகப் படுவார்கள். சுவீடிஷ் அரசியலார் தங்களுடைய மருத்துவச்சாலைகளில் நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூபாய் 18 வீதம் செலவிடுகின்றார் கள். ஆயினும், நோயாளிகளிடமிருந்து 4 ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டு, எஞ்சிய செலவைத் தாங்களே ஏற்றுக்கொள்ளுகின்றனர். கல்வி எட்டு ஆண்டுகள் இலவசக் கட்டாயக் கல்வி முறை சுவீடனில் நடைமுறையில் இருக்கிறது. அவ் வாறு கற்க இயலாதவர்கள் ஏழு ஆண்டுகள் கற்ற பின்னர், வாரந்தோறும் இரண்டு நாட்கள் விகிதம் ஈராண்டுகள் கல்வி கற்கவேண்டும். எல்லா மாணவர் கட்கும் சிற்றுண்டியும், ஏழை மாணவர்கட்குப் பேருண்டியும் உடையும் அரசியலாரால் விலை பெறா மல் கொடுக்கப்படுகின்றன. ஓராண்டில் 360 மைல் கள் இலவச உல்லாசப் பிரயாணமும் மாணவர் கட்கு உண்டு. கல்லூரிகள் கண்ணைக் கவரும் கட் டிடங்களில் அமைந்துள்ளன. உயர்தரக் கல்லூரி களில், தாய்மொழி தவிர, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்