உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுவழி நாடு 18 தோறும் நடைபெறுகின்றன. உலகிலேயே இந்நக ரில்தான் திறந்த வெளியில் உயிர்க் காட்சிச்சாலை இருக்கின்றது. ஸ்டாக்ஹோமில் பல பல கட்டிடங்களில் பத்தா வது மாடியில், குழந்தைகள் விளையாடுவதற்காகத் தோட்டங்கள் இருக்கின்றன. இங்குள்ள நகர மண் டபம் (Town Hall) சுவீடனின் சிற்பக்கலைக்கு எடுத் துக்காட்டாகும். உலக சமாதானத்துக்கு உழைத்த வர்கட்கும், பிற பெரியோர்கட்கும், நோபல் பரிசுகள் ஏற்ப படுத்திய சுவீடிஷ்காரரான ஆல்ப்ரட் நோபல் என் பவர் நினைவாகப் பெரியதோர் நூல்நிலையம் இந் நகரில் உள்ளது. மக்களின் குணங்கள் சுவீடிஷ் மக்கள் மிகவும் சுறுசுறுப்பானவர். கள்; எவ்வேலையையும் முகமலர்ச்சியோடும் திறமை யோடும் செய்யும் இயல்புடையவர்கள். தமிழ் மக்க ளைப்போலவே, சுவீடிஷ் மக்களும் நகைச்சுவை நிரம்பியவர்கள். இவர்களுடைய நாட்டு விளையாட்டு, கால் பந்தாட்டம்; நாட்டு ஊர்தி, ஈருருளி (Bicycle); நாட்டு உணவு, மீன். அடுத்தபடியாக, இவர்களுக்குப் பால் சேர்க்காத கறுப்பு நிறக் காப்பியில் விருப்பம் மிக உண்டு. இந்தியக் காப்பி உலகெங்கும் புகழ் பெற்றதாகையால், சில சுவீடிஷ் பெண்கள் காப்பி தயாரிப்பது பற்றி என்னை வினவினர்; நான் அதற்கு மறுமொழியாகச் சாமர்த்தியமாக ஏதோ சொல்லி மழுப்பிவிட்டேன். சுவீடிஷ்காரர்கள் தம் ஈருருளிகளைப் பூட்டி வைப்பதில்லை; இரவிலும் தத்தம் வீட்டுக்கு முன்பா கத் தெருக்களிலேயே விட்டுவிடுவர்.இவ்வாறிருந்தும்