உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுறவு நடுவழி நாடு 21. கூட்டுறவு இயக்கம் உலகில் பரவியது சுவீட னில் அது வெற்றிபெற்றமையாலேயாம். பல பெரிய. தொழிற்சாலைகள் இங்கே கூட்டுறவு முறையில் நடைபெறுகின்றன. சில்லறை வியாபாரத்திற் பெரும்பகுதி இந்த இயக்கத்தாரிடமே இருக்கிறது. கள்ள வாணிகம் இங்கு இல்லையெனின், இவ்வியக் கத்தாரின் ஆட்சித் திறமையைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ? வீடு பற்றாக்குறையைப் போக்க, ஸ்டாக்ஹோம் நகராண்மைக் கழகத்தினர், கூட்டுறவு இயக்க மூல மாகப் பல்லாயிரம் வீடுகள் கட்டிக் குறைந்த வாட கைக்கு விட்டிருக்கின்றனர். தொழில்கள் . சிமிண்டு, இரும்பு, மரச்சாமான்கள், செயற்கை வீடுகள் ஆகிய இவற்றைச் செய்யும் தொழிற்சாலை கள், நெசவு ஆலைகள், சுரங்கங்கள், பலவகை இயந் திரங்களை உண்டாக்கும் சாலைகள் இவை போன்ற எத்துணையோவகைத் தொழிற்சாலைகள் இந்த நாட் டில் சிறந்து விளங்குகின்றன. எனினும், சுவீட னுக்கே சிறப்பாக உரியவை, காகித ஆலைகளும் பீங்கான் தொழிற்சாலைகளுமேயாம். சுவீடனில் 200 காகித ஆலைகள் இருக்கின்றன. இவற்றில் சில ஆலைகள் பத்திரிகைக் காகிதமும் அட்டையுமே உண்டாக்குகின்றன. போக்குவர வுக்கு வசதியாக, இந்த ஆலைகள் யாவும் துறைமுகங் களை இணைக்கும் கால்வாய்களின் கரைகளிலேயே இருப்பதையும் நான் கவனித்தேன். .