உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் ஒரு நாட்டில் மிகுதியாயுள்ள பொருளிலிருந்து எல்லாப் பொருள்களையும் செய்தல் பலநாட்டு வழக் கம். (ஜப்பானில் மூங்கிலிலிருந்து மட்டும் 1400 வகை யான பொருள்கள் செய்கின்றனராம்.) இம்முறை யை ஒட்டிச் சுவீடன் மக்களும் தங்கள் நாட்டில் மிகுதி யாயுள்ள காகிதத்திலிருந்து செய்யாத பொருளே இல்லை எனலாம். காகிதப்போர்வைகள்கூடச் செய் கின்றனர். கரன்சி நோட்டு என்ற காகித நாண யத்தை உலகுக்கு வழங்கியவர்களும் சுவீடிஷ்காரர் களே ஆவர். பொருளாதாரச் செழிப்பு நம்நாட்டு நாணயமாகிய ரூபாய் இங்கிலாந்தின் காணயமான ஸ்டர்லிங்குடன் இணைக்கப்பட்டிருப் பது போல, சுவீடனின் நாணயமான குரோனர் {1 குரோனர்= 14 அணா) அமெரிக்காவின் நாணய மான டாலருடன் இணைக்கப்பட்டிருக்கிறது. டாலர் இஞ்ஞான்று பெருமதிப்புள்ள அரிய நாணயமாக இருப்பதால், சுவீடிஷ் நாணயமும் வலுவான நிலை யில் உளது. சுவீடிஷ்காரர்கள் பொதுவாகச் செல் வச் செழிப்புடையவர்கள். மற்ற ஸ்காந்தினேவிய நாடுகளிலுள்ள சொத்துக்களிலும் தொழில்களிலும் பெரும்பகுதி இவர்களைச் சேர்ந்ததேயாகும். வேலை யின்மை சுவீடனில் கிடையாது. மக்களில் பாதித் தொகையினர் பேங்குகளில் கணக்குகள் வைத்திருக் கின்றனர். கீழ்க்கண்ட புள்ளி விபரங்கள் சுவீட னின் செழிப்பை வெள்ளிடை மலைபோல் தெரிவிக் கின்றன. வானொலி நிலையங்கள்- 33 வானொலிக் கருவிகள்-20,00,000.