உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நான் கண்ட வெளிராட்டுக் காட்சிகள் காகிதத்தாலான குவளைகளும் கைக்குட்டைகளும் ரயில்களில் வைக்கப்பட்டுள. விரைவாகச் செல்லும் ரயில்களில் டைனிங் கார் என்னும் உணவுச்சாலையும் உண்டு. மேல்வகுப்புப் பிரயாணிகட்கு ரயில்வேப் படமும் தினசரிப் பத்திரிகையும் விலையில்லாமல் கிடைக்கும். நம் நாட்டில் பஸ்களில் இருப்பது போன்று சுவீடன் ரயில்களில் கண்டக்டர் இருக்கி றார். இவர், குறிப்பிட்ட ரயில் அடுத்து எந்த ஊரில் நிற்கும் என்பதை ஒலிபரப்புங் கருவி மூலம் அறி வித்துக்கொண்டேயிருப்பார். அரசியல் து நம் நாட்டைப் போலவே, (ஆனால் ஒரு முடியர சின் கீழ்) கட்சி முறையில் சுவீடனில் மக்கள் ஆட்சி நடைபெறுகிறது. சுவீடிஷ் மக்களுக்கு அரசியல் செய்திகளில் மிக்க கவனமில்லை.ஆயினும், மன்ன ரிடத்தில் மக்கள் மிகவும் பற்றுள்ளவராக இருக்கி றார்கள். சுவீடிஷ் மன்னர் குஸ்தாவைச் சந்தித்த ஒரு வர் மெய்காப்பாளர் இன்றியே அவர் இருப்பதைக் குறிப்பிட்டபோது, தமக்கு 70 லட்சம் மெய்காப்பா ளர் இருப்பதாக அம் மன்னர் கூறினாராம் தம் மக் களுக்குத் தம்மீதுள்ள அன்பையே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். 90 வயதுடைய குஸ்தாவ் மன்னர் நான்கு மொழி கள் பேசுகிறார், வேட்டையாடுகிறார், நீந்துகிறார். பாலஸ்தீனப் போர் பரவாதபடி தடுத்த காலஞ் சென்ற கவுன்ட் பெர்னுடாட்டே இம்மன்னரின் உற வினர். இந்தியாவும் சுவீடனும் இந்தியாவின்மீது சுவீடிஷ் மக்கள் உள்ளன்புடைய வர்கள். மகாத்மா காந்தியடிகளின் மரணச் செய்தி