நடுவழி நாடு 25 பிற ஐரோப்பியரைக் காட்டிலும் சுவீடிஷ் மக்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்திற்று. எப்போதும் சமாதானத்தில் விருப்பமுடையவர்களாகிய சுவீ டிஷ் மக்கள் உலக அமைதிக்காகவே உயிர் நீத்த உத்தமரை இழந்தது பற்றிச் சொல்லொணாத் துய ரடைந்தது இயற்கையேயன்றோ? சுவீடனில் மது உட்கொள்ளுவதைப்பற்றிய பல தடைகளும் கட்டுப் பாடுகளும் பங்கீட்டு முறையும் இருப்பதும் குறிப் பிடத்தக்கது. முடிவு சுவீடன் கடந்த நூறு ஆண்டுகளில் தான் இந்த உயர்நிலையை அடைந்திருக்கிறது. இதற்குக் காரண மாயுள்ளவர்கள் கைதேர்ந்த தொழிலாளர்களும், சிறந்த பொறியியல் வல்லார்களும், புகழ்பெற்ற விஞ்ஞானிகளும், திறமையான ஆட்சியாளர்களும், நிலைத்த அமைச்சர்களும் ஆவர். மேலும் மலிவான் மின்சார வசதியும் தொழிலாளரிடையே அமைதி யும் இங்கே காணப்படுகின் றன. உணவு வகைகளில் சுவீடன் நாட்டவர் பிறரை எதிர்பாராது தங்களுக்கு வேண்டுவனவற்றையெல்லாம் தாமே விளைவித்துக் கொள்கின்றனர். நம் நாட்டுக்கும் அவை அனைத் தும் வேண்டும். இவை இருந்தால், இந்தியாவும் இந்த வையத்து நாட்டிலெல்லாம், உயர்வுற்று, வறுமை நீங்கி வாழலாம்.
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/31
Appearance