இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3. வடஅயர்லாந்தில் சில நாட்கள் பெல்பாஸ்ட் . வட அயர்லாந்தின் தலைநகரமாகிய பெல் பாஸ்ட் என்பது மதுரை அளவுள்ள ஓர் அழகிய நக ரம் ஆகும்.நியூயார்க், லண்டன்,பாரிஸ் ஆகிய நக ரங்களோடு ஒப்பிட்டு நோக்கின், பெல்பாஸ்ட் ஒரு சிறிய நகரமே. மதுரைக்கு நடுநாயகமாக மீனாட்சி சுந்தரர் கோவில் அமைந்திருப்பதுபோல், பெல் பாஸ்டுக்கு நகரமண்டபம் அமைந்துள்ளது. இது சிற்பக் கலையழகு நிறைந்த கட்டிடமாகும். செல்வம் பொழியும் நேராக அமைந்த அகன்ற சாலைகள் இதைச் சுற்றி நாற்புறமும் இருக்கின்றன. இக் கட்டிடத்தின் ஒரு தோற்றத்தைக் கீழேகாணலாம். மதுரையில்,பட்டு, துணி இவைகளின் உற்பத்தி மிகுந்திருப்பதுபோல், பெல்பாஸ்டில் வினன் ஆடை