உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் மாக யுனைட்டெட் கிங்டம் என்று கூறுதல் வழக்கு. இங்கிலாந்திலுள்ள நாணயமே வட அயர்லாந்திலும் வழக்கில் உள்ளது. ஆங்கிலேயரின் சட்டங்களே இங்கும் நடைமுறையில் இருந்து வருகின்றன. இங் கிலாந்துக்கும் இந்த நாட்டுக்கும் எவ்விதச் சுங்கத் தடையும் இல்லை. வட அயர்லாந்து மக்கள் ஐரிஷ் மொழியைப் பெரும்பாலும் மறந்துவிட்டனர். ஆங் கிலம் ஒன்றே இங்கு இப்போது வழங்கும் மொழி யாகும். பெல்பாஸ்டில் வெளியாகும் நான்கு தின சரிப் பத்திரிகைகளும் ஆங்கிலத்திலேயே உள்ளன. நிலப்பரப்பும் மக்களும் வட அயர்லாந்து ஆறு மாவட்டங்களும் பன்னி ரண்டரை லட்சம் மக்களும் உள்ள ஒரு சிறுநாடா கும். எனினும், வட அயர்லாந்து சிறப்புற்றிருப்ப தற்குக் காரணம் இந்த மக்களின் பேராற்றலே யாம். இவர்கள் திறமையுடையவர்கள்; சுறுசுறுப் பானவர்கள்; செல்வம் திரட்டுவதிலும், உற்பத்தி யைப் பெருக்குவதிலும் இணையற்றவர்கள். வாழ்க் கைப் போட்டியில் இவர்களை வெல்லுவதைக் காட் டிலும், இமயமலை உச்சிக்கு ஏறிவிடுதல் எளிது. சில பண்புகள் வட அயர்லாந்துக்காரர்கள் தனிப்பட்ட இயல் புடையவர்கள்; அரசியல் உணர்ச்சி அற்றவர்கள்; பழங்கொள்கைகளைப் பின்பற்றாதவர்கள்; கேளிக் கைகளில் விருப்பில்லாதவர்கள். ஆங்கிலேயரிட முள்ள அரை குறை நகைச் சுவையைக கூட வட அயர்லாந்து க் காரர்களின் சமூக வாழ்வில் காணுதல் அரிது. அண்மைக் காலத்தில்,