உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட அயர்லாந்தில் சில நாட்கள் 29 இசையும் கூத்தாடுதலும் (Folk-dance) அல்ஸ்டரில் பெரிதும் வளர்ந்திருக்கின்றன. ஆனால், இவர்கள் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்ணா யிருப்பார்கள். இயற்கைக் காட்சி தென் அயர்லாந்தைப்போலவே, வட அயர் லாந்தும் இயற்கைக் காட்சிகள் நிறைந்த நாடாம். யாத்திரை செய்பவர்கள் விரும்பும் பல பகுதிகள் இங்கே உள்ளன. இல்லாவிட்டால், எவரையும் கேலி செய்யும், 93வயதுக்குமரன் ஜி.பி.எஸ்.(அறிஞர் ஜார்ஜ் பெர்னார்டுஷா) அயர்லாந்தைப்பற்றி நல்ல பாட்டொன்றெழுதி,பான் அமெரிக்கன் விமானக் அதை விளம்பரத்திற்குப் பயன் படுத்து அனுமதிப்பாரா?ஆனால், ஷா ஒரு ஐரிஷ் காரர். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே ! கம்பெனியார் தொழில் வளர்ச்சி தொழில்வளர்ச்சி அல்ஸ்டரில் மின்னல் வேகத் தில் பரவிற்று, பெல்பாஸ்டின் கப்பல் கட்டும் தளங்கள் உலகப்புகழ் பெற்றவையாகும். போர்க் காலத்தில் மட்டும் 300 கப்பல்கள் இங்குக் கட்டப் பட்டனவாம், நான் சென்ற அன்று, சிந்தியா கம்பெனியாருக்காகக் கட்டப்பட்ட புதிய கப்பலொன்று மிதக்கவிடப்பட்டது. இவ்விழாவில் தேங்காய் உடைக்கப்பட்டது, அயர்லாந்துக் காரர்கள் இதற்கு முன்பு காணாத ஒரு காட்சி யாகும். காலத்துக்குத் தக்க முன்னேற்றமடை வதில் சிறந்த அறிஞர்களான அல்ஸ்டர்க்