5. ஓர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம் நியூயார்க்கிலிருந்து 700 மைல் தொலைவில் உள்ள கொலம்பஸ் நகரில் இருக்கும் ஒஹையோ* மாகாணப் பல்கலைக் கழகத்தில், சென்ற நவம்பர் 20 முதல் 27 வரை நான் கழித்த ஒரு வாரத்தில், அங்கே கண்டதையும் கேட்டதையும் சிறிது விளக் கிக் கூற விழைகின்றேன். கொலம்பஸ் நகரை அடைதல் வியாபார வேலையாகவே, அமெரிக்காவுக்கும் ஏனைய நாடுகட்கும் சென்ற யான், ஒல்லும் வகை ஆங்காங்குள்ள கல்வி நிலையங்களையும் கண்டேன். மெரிக்காவில் நான் விரிவாகப்பார்த்த பல்கலைக் கழகம் ஓஹையோதான். பிற பல்கலைக் கழகங்களை நீக்கி, இதை நான் தேர்ந்துகொண்டதற்குக் கார ணம், வடஆர்க்காடு மாவட்டத்துத் திருப்பத் தூரைச் சேர்ந்த இராசம்மாள் தேவதாஸ் என்ற என் இனிய நண்பரொருவர் அங்கிருந்ததேயாகும். அவர் அப் பல்கலைக் கழகத்தில் இல்வாழ்க்கைக் கலைக் (Home Economies) கல்வி பயின்று வருகின் றார். அவர் சென்னை,மேரி அரசியார் கல்லூரியில் ஆசிரியராயிருந்தபோது 1947-ல் இந்திய அரசின் ரால் உணவு ஆராய்ச்சிசெய்ய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். அங்கே, எம். எஸ்சி. பட்டம்பெற்று, டாக்டர் என்னும் உயர் வும்
ஐக்கிய அமெரிக்காவின் 48 மாகாணங்களில் ஓஹையோ ஒன்று; அதன் தலைநகரான கொலம்பஸ் 4,00,000 மக்க ளுள்ள நகரம். .