50 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் தரப் பட்டம் பெற இப்போது ஆராய்ச்சிசெய்து கொண்டிருக்கின்றனர். அவர் உணவின் ரகசியம் என்ற தமிழ் நூலை இயற்றியவர்; தமிழ், ஆங்கிலம் ஜெர்மன் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த தேர்ச்சி யுடையவர்; ஓய்வு நேரமெல்லாம் தமிழ்ப் பண் பாட்டை அமெரிக்காவெங்கும் பரப்பிவருகின்றார். அமெரிக்கப் பொருளாதாரக் கழகத்தினர், அண் மையில் அவருக்குச் சில பரிசுகள் வழங்கிச் சிறப் பித்துள்ளனர். சென்ற ஆகஸ்ட் திங்களில் அவர் ஓஹையோ மாகாணச் சட்டசபையில் பேசினார். கொலம்பசில் நான் சந்திந்த யாவரும் அவ்வம்மை யாரின் நுண்மாண்நுழை புலத்தையும், சுறுசுறுப் பையும், எளிமையையும், ஒன்னலரையுந் தம் வய மாக்கும் கவர்ச்சியான பேச்சுத் திறனையும், பிற ஆற்றல்களையும் பாராட்டி வியந்த போது, "திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" என்ற பாரதியாரின் கனவுநன் வாகியதை உணர்ந்தேன். பல்
எங்களுடைய பொது நண்பர் ஒருவர் வாயிலாக, அவ்வம்மையாரை அறியும் பேறு பெற்றேன். அவர்களின் அழைப்புக்கிணங்க, ஒருவாறாக, எனது வேலைகளை முடித்துவிட்டு, ஒரு வாரம் தங் கும் நிலையில், கொலம்பஸ் நகரை அடைந்தேன். வரவேற்பு இராசம்மாள் அவர்கள், என்னைத் தம் விருந் தினராக ஏற்றுக்கொள்ளும் அவருடைய நண்ப ரான மிஸ்டர் வொல்லர்மனையும் உடனழைத்துக் கொண்டு ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் வொல்லர்மனின் லத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். இல் பிற