60 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் சிறப்புடையது. மிகுதியான மாணவர்கள் தம் நேரத்தை செயற் காட்சிச் சாலையிற் (Laboratory} செலவிடாவிட்டால், நூல் நிலையத்திலேயே கழிப் பர். இரவு 11 மணி வரையில் பல நூல் நிலையங் கள் திறந்திருக்கும். ஆராய்ச்சியாளருக்குத் தனி நூல் நிலையங்களும் பொழுதுபோக்குப் படிப் புக்குத் தனி நூல்நிலையங்களும் பல அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் உள்ளன. ஓஹையோ பல்கலைக் கழக நூல் நிலையத்தில் 8,00,000 நூல்கள் இருக்கின்றன. ஆண்டுதோறும் இந் நூல் நிலையத் திற்கு 5,00,000 ரூபாய் செலவிடுகின்றனர். திரைப்படக் காட்சி பல்கலைக் கழகத் திரைப்படக் காட்சிச் சாலைக் கும் சென்றேன். இங்கே யாவரும் பணம் கொடுக் காமல் விரும்பியபோதெல்லாம் திரைப் பார்க்கலாம். தென் அமெரிக்கப் படம் பிரயாணம், திரைப்படக் காட்சிச் சாலை அமெரிக்க வாணிகம், ஐக்கிய நாடுகள் சபை என்ற மூன்று படங்களை ஒரு மணி நேரத்திற்பார்த்தேன்.
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/66
Appearance