அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம் மாணவர்களின் உணவு விடுதி 61 ப்ரடர்னிடியில் அன்றிரவு எனக்கு ஒரு (Fraternity = மாணவர்கள் சகோதரத்துவ சபை விருந்து நடந்தது. அப் பல்கலைக் கழகத்தில் மட்டும் இது போன்ற ஆண் மக்கட்குரிய மாணவர் விடுதிகள் 75 உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனிக் கட்டிடம் உண்டு.நான் விருந்துண்ட ப்ரடர்னிடியில், 16 மேல் வகுப்பு மாணவரும், 16 கீழ் வகுப்பு மாண மாணவர் உணவு விடுதி வரும் ஆக 32 மாணவர்கள் இருந்தனர். ஒவ்வொரு மேல் வகுப்பு மாணவருக்கும், தாம் விரும்பும் கீழ் வகுப்பு மாணவரொருவரைத் தம் அறையில் தங்கி யிருக்க அனுமதிக்கும் உரிமை உண்டாம். அந்த ப்ரடானிடிகளில், இன்றியமையாத சமையல் வேலைகட்கு மட்டுமே சம்பளங் கொடுத்து வேலையாள் நியமிப்பர்; உணவு படைக்கும் வேலையையும் பாத்திரங் கழுவும் வேலையை யும் ப்ாடர்னிடியின் உறுப்பினரே, தமக்குள் கால வரையறை செய்துகொண்டு, மாறிமாறிச் செய்வர். வறுமை மிகுந்துள்ள நம் நாட்டில், இவை போன்ற சிக்கன முறைகளைக் கையாளவேண்டி
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/67
Appearance