உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிக யதன் இன்றியமையாமையை எவ்வளவு வற்புறுத் திக் கூறினாலும் மிகையாகாது. எல்லா ப்ரடர்னிடிகளும் அவற்றுக்குத் தேவை யான பொருள்களைத் தொகுத்து வாங்கிக்கொள் ளுகின்றன. அவை வாங்கும் உணவுப் பொருள் களைப் பல்கலைக் கழக இல்வாழ்க்கைக் கலைப் பகுதியினர் சோதிக்கின்றனராம். அங்கே உண வாக்குவதற்குப் பயன்படும் நிலக்கரியின் தன்மை யைப் பல்கலைக் கழக ரசாயன நிபுணர் சரி பார்க்கிறாராம். உ ப்ரடர்னிடிகளில் ஒவ்வொரு நேர உணவுக்கும் குறித்த நேரம் உண்டு. மணி அடித்ததும், உறுப்பினர் தத்தமக்குரிய இடங்களில் அமர வேண்டும். நம் நாட்டு உணவு விடுதிகளிற்போலக் குறித்த நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை விரும்பியபோது உணவருந்தச் செல்லுவது அங்கே இயலாது. உணவின் தொடக்கத்திலும் இறுதியிலும் உறுப்பினர் அ னைவரும் சேர்ந்து இசை பாடுவர். பிற அலுவல்கள் கழகச அன்றிரவு உணவுக்குப் பின்னர்ப் பல்கலைக் சமய ஆலோசகரும் இந்தியாவின்பால் மிக்க பற்றுடையவருமான ரெவரண்டு டாக்டர் மக்ளீன் என்பாரும் நானும் சொற்பெருக்குகள் ஆற்றி னோம் அடுத்த அலுவலுக்கு நேரம் ஆகிவிடவே, இல்வாழ்க்கைக் கலைப் பகுதித் தலைவி டாக்டர் மிஸ். பிராளிகன் அவர்களுடைய இல்லத்துக்கு டாக்டர் மகளீனும் நானும் விரைந்தோம். அங்கே எல் லோருக்கும் தமிழ் நாட்டுச் சிற்றுண்டிகள் பரி மாறப்பட்டன.