உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நான் கண்ட வெளிகாட்டுக் காட்சிகள் புதியதாயினும், சுவையான அனுபவமாக இருந் தது. பேராசிரியர் கெர்ச்சர் தம் மாணவரும் நானும் இருந்த இடத்துக்குத் தம் காரைத் தாமே ஓட்டிக் கொண்டுவந்து எங்களை அவர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றதும், தம் வீட்டில் வண்ண வேலைகளைத் தாமே செய்ததாகச் சொன்னதும், அன்று விருந்தில் நண்பர்கட்கும் மாணவர்கட்கும் பேராசிரியத் தோழர்கட்கும் உணவு படைக்கும் வேலையையும் தட்டுக் கழுவும் வேலையையும் தாமே செய்ததும், தம் சமையலறைக்குள் என்னை அழைத் துச் சென்று மின்சார அடுப்பை எனக்கு இயக்கிக் காட்டியதும், தம் மாமியாரை எனக்கு அறிமுகப் படுத்தியதும் நான் நம்பமுடியாத காட்சிகளாக இருந்தன. வந்தனங்கூறும் ஆண்டுவிழா வியாழக்கிழமை, வந்தனங்கூறும் நாள் (Thanks giving day). அதாவது, ஐரோப்பாவிலிருந்து அமெ ரிக்காவுக்கு வந்து நூறாயிரக்கணக்கானவர் குடியே றியதைக் குறிக்கும் ஆண்டுவிழா நாள்; செல்வத் திற் சிறந்து விளங்கும் அமெரிக்கப் பூமியிற் குடியே றியதற்காக அமெரிக்கர்கள் அனைவரும் ஆண்டவ னுக்கு நன்றி செலுத்தும் நாள். அதனை உழவுக் கும் தொழிலுக்கும் வந்தனம் செலுத்தும் நம் பொங் கலைப்போன்ற விழா எனக் கூறலாம். அது அமெ ரிக்கரின் நாட்டுவணக்கப் பெருநாள். ஆண்டுதோ றும் நவம்பர்த் திங்களில் நாலாவது வியாழக்கிழமை யில் அது நிகழும். நாடெங்கும் அன்று விடுமுறை நாள். அமெரிக்கருக்கு மிகச் சிறப்பான நாட்களில் அது ஒன்று. குடும்பத்து உறுப்பினர் அனைவரும் ஒருங்கேகூடி மகிழும் அந்நாள் 1621- ஆம் ஆண்டு