ஹோன்லூலூ நினைவுகள் 70 களும் எண்ணிறந்தவை. இவை ஹோனலூலூவில் தலைமுறை தலைமுறையாய் வழங்கி வருகின்றன. நாட்டு வளம் எரிமலைச் சாம்பல்களால் பண்பட்ட ஹாவாய்ப் பூமி நல்ல வளமுடையது. கரும்பும் அன்னாசியும் வளமாக இங்கே பயிராகின்றன. இத்தீவின் மிகுதி யான ஏற்றுமதிகள் சர்க்கரை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, அன்னாசிப்பழம், வாழைப்பழம் என்பவை யாம். இவை நீங்கலாக, வெளியுலகிலிருந்து பொழுதுபோக்க வருபவர்களாலும், மீன் பிடித்த லாலும் இங்கு வாழும் மக்களுக்கு நல்ல வருவாம் உண்டு. கால நிலை ஹாவாயின் காலநிலை விரைவில் மாறும்தன்மை உடையது. வெப்பம் மிகுதியாய் இருக்கும். ஆனால், சில வினாடிகளிலே மழை கொட்டிவிடும். சராசரி வெய்யில் 74 டிகிரி எனின்,உடல் நலத்துக்காகவே இங்கே பல்லாயிரவர் வருவது இயல்புதானே! மக்கள் ஹாவாய்த் தீவுகளில் வாழும் மக்களின் தொகை ஐந்து லட்சம்; அஃதாவது, மதுரை ஈகரைப் போன்றது. சிங்கப்பூரைப் போலவே பல நாட்டு மக்களைக் கொண்ட நாடு இது. மக்களில் மூன்றிலொரு பங்கு ஜப்பானியராவர். மலேயா நாட்டில் இப்போது சீனரின் குடியேற்றம் தடை செய்யப்பட்டிருப்பதைப் போலவே, ஹாவாயில் இப்போது ஜப்பானியர் புதிதாகக் குடியேற அனுமதிக்கப்படுவதில்லை. மலேயாவில் மலாய்க் காரர்களைப்போல், ஹாவாயர்களும் தங்கள் நாட்டில்
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/77
Appearance