172 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் தாங்களே சிறுபான்மையோராகி விட்டனர்- இப் போது ஹாவாயர்கள் முப்பதாயிரம் பேர் இருக்கக் கூடும். சீனர், பிலிப்பைன்காரர், போர்ச்சுகீசியர் கொரியர் ஆகியோர் இங்கு வாழும் ஏனைய மக்க ளாவர். நாலைந்து இந்தியர்களும் இங்கே இருக்கின் றனர். இவர்களில் ஒருவரான கோபித்தராம் வாட்மல் என்பவர் மிகுந்த செல்வாக்குடைய வணிகர். இத் தீவில் பெரும்பொருள் ஈட்டி ஓர் அமெரிக்கப் பெண்ணை மணந்து சில ஆண்டுகட்குமுன் இந்திய ரின் கல்விக்குப் பெருங்கொடைகள் அளித்துள்ள வர் இவர். சுவீடனைப் போலவே ஹாவாயிலும் கலப்பு மணம் மிகுதியாய் நடைபெறுகிறது. ஹாவாய் மொழி ஹாவாய் மொழி மிகவும் வியப்பான மொழி யாகும். அம்மொழியிலுள்ள எழுத்துக்களின் எண் ணிக்கை பன்னிரண்டேயாம். ஒரு சொல்லையே பெயர்ச்சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் பயன் படுத்தலாம். இது மிக இனிமையான இங்கே சில சொற்களைக் காண்போம்:- அலோஹா வாஹினி ஹுலாஹுலா மலாமோபோனா விக்கி விக்கி ஹலேபுலே பழக்க வழக்கங்கள் வணக்கம் மொழி. பெண் நடனம் கவனமாய் இரு விரைவாக கோவில் ஏழாம் வகுப்புக்கு வந்தபின்புதான் குழந்தை கள் செருப்பு அணிவது இந்நாட்டுவழக்கம். ஹாவாய்
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/78
Appearance