உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் அண்மைக் காலத்தில், அமெரிக்கர்களுடைய நடை, உடை பாவனைகளையெல்லாம் ஹாவாயர்கள் நன்றாய்ப் பழகிக்கொண்டு விட்டனர். ஹாவாயர்கள் இன்பவாழ்வில் விருப்புடைய வர்கள்; விழாக் காலங்களில், கழுத்தில் அழகிய நீண்ட மலர் மாலைகளை அணிந்து கொள்ளுவர். இவர்களுடைய விழாக்களில் சிறந்தது அலோஹ வாரம் என்பதாம். இவ்விழாவில் ஏழு நாட்களுக்கு இயல் இசை நாடக நிகழ்ச்சிகள் நடைபெறும். ஹாவாய்ப் பெண்களின் நடனத்தைப் பற்றிக் கேள்விப்படாதவர் இரார். கலை வனப்புடைய இந்நடனம் ஹாவாய்த் திருவிழாக்களின் ஒருசிறந்த பகுதி. அலோஹா வாரத்தை ஹாவாய் வணிகக் குழுவினரே நடத்துகிறார்களாம். மற்றொரு ஹாவாய் திருவிழா அன்னாசிப்பழத் திருவிழாவாம். விளையாட்டுக்கள் ஹாவாயர்கள் உடற்பயிற்சியில் அளவுகடந்த ஆவல் உள்ளவர்கள். அவர்களுக்கு மிக விருப்ப மானவை நீந்துதலும் மீன்பிடித்தலும் ஆகும். சில விநோதங்கள் ஹாவாயில் பாம்புகளே இல்லை. ஹாவாய்த் தபாற் சட்டப்படி, வணிகர்கட்கு மட்டுமே நாள்தோறும் இருமுறை தபால்கள் வழங் கப்படும். மற்றவர்களெல்லாம் நாள்தோறும் ஒரு முறையே கடிதங்களைப் பெறுவர். இத்தீவுகள் ஜப்பானுக்கும் அமெரிக்கரவுக்கும் டையே இருப்பதாள், ஹாவாயர்கள் இந்தியாவையும்