உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹோனலூலூ நினைவுகள் 75 சீனாவையும் ஜப்பானையும் மேற்குத்திசை நாடுக ளென்றும், அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் கிழக்குத்திசை நாடுகள் என்றும் கூறுவர்! பல துறைகளில் முன்னேற்றம் பெருங்கப்பல்களையும் செப்பனிடும் நல்ல துறை முகமும், அமெரிக்க ஆகாய விமானப்படையின் தளமும், முன்னாள் மன்னர்களின் அரண்மனையும், ஜப்பானியர்களின் திருக்கோயிலும், ஒரு பல்கலைக் கழகமும் ஹோனலூலூவில் இருக்கின்றன. ஹாவாய்ப் பல்கலைக்கழகம் அமெரிக்கக் கல்வி நிலையங்களையொட்டிச் சீரிய முறையில் அமைந் திருக்கின்றது. சீனத் தலைவர்கள் பலர் இங்கே தான் கல்வி கற்றனர். ராக்பெல்லர் என்னும் அமெ ரிக்க நாட்டுப் பெருஞ் செல்வர் இப் பல்கலைக் கழ கத்தில் தத்துவ சாஸ்திரப் பயிற்சி நடத்துவதற் காகப் பெரும் நன்கொடை அளித்திருக்கிறார். அத னால்தான் உலக தத்துவ சாஸ்திர மகாநாடு இவ் வாண்டில் ஹோனலூலூவில் கூடிற்று. . ஹாவாய்த்தீவு முழுவதிலும் பெரும்பாலோர் இப்போது ஆங்கிலமொழி பேசுகின்றனர். ஆட்சி முறை ஹாவாயின் கடைசி அரசியாரான லிலியா ஹோபாணி என்பவள், 1893-ல் அமெரிக்க வணிகர் களின் சூழ்ச்சியால் பதவியிழந்தபின், 1900-ல் இத் தீவுகள் அமெரிக்க ஆட்சிக்குட்பட்டன. இந்த நூற் றாண்டில் இத்தீவுகள் அரசியல் துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆயினும் அமெரிக்க 88-6