உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. விளையாட்டுக்கள் உடற்பயிற்சி சக வாழ்வுக்கு உடற்பயிற்சி இன்றியமை யாதது. உடற்பயிற்சி செய்வதால், உடலிலுள்ள உறுப்புக்கள் வன்மையடையும்; இரத்த ஓட்டம் மிகும்; பசி உண்டாகும்; கழிவுப் பொருள்கள் உடலி னின்றும் நீங்கும்; உடலின் தசைகள் நன்கு வளரும். இவற்றால் உடலுக்கு வலிமையும் அழகும் உண்டா கும். உடல் நோயில்லாமலிருக்கும். விளையாட்டின் பயன் மேற்கூறியவை தவிர, அறிவால் வேலை செய் யும் ஒருவனுக்கு விளையாட்டின் வாயிலாக ஓய்வு கிடைக்கிறது.காற்றோட்டமுள்ள இடங்களில் சிறிது நேரத்தைக் கழிக்கவும், விளையாட்டுக்களால் வாய்ப் புக் கிடைக்கிறது. உள்ளக் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டாக் கும் வலிமை தரத்தக்க விளையாட்டுக்கள் பல உண்டு. வெளி நாட்டினர் இவ்விளையாட்டுக்களை வாழ்நாள் முழுவதும் ஆடுவது, என்னை வியப்படையச் செய் தது. அந்நாட்டு இளைஞர் நம் நாட்டு இளைஞரைக் காட்டிலும் நல்ல உடற்கட்டோடு இருப்பதால், உட லமைப்பையாவது உயரத்தையாவது பார்த்து, அவர்களுடைய வயதை மதிப்பிடுவது பொருத்த மாகாது.