பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இரண்டாவது ஐந்தாண்டு நகல் திட்டத்தில் காகிதத் தொழிற்சாலை துவங்குவதற்கான இன்றியமையாத அவசரத்தேவை குறித்தும் வற்புறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் திட்டம் உருப்படியான பலனைத் தரவில்லை. நீலகிரி மலைப்பிராந்தியத்திலிருந்து கிடைக்கக்கூடிய மரப்பட்டை, மூங்கில் ஆகியவைகளைக்கொண்டும், தஞ்சையில் உள்ள சர்க்கரை ஆலைகளிலிருந்து கிடைக்கக்கூடிய துணைப்பொருள்களைக் கொண்டும் இந்த இரண்டு பிராந்தியங்களிலும் காகித தொழிற்சாலைகள் நிறுவுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

ஜிப்சம் என்ற ஒரு வகை கனிப்பொருள் அளவில் கணிசமாகக் கிடைக்கிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் மிகுந்து காணப்படும் இந்தக் கனிப்பொருளை முறையாகவும், இலாபந்தரக்கூடிய வகையிலும் பயன்படுத்தி அந்த கிகா அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் நிறுவலாம்.

சர்க்கரை ஆலைகளில் கிடைக்கும் சர்க்கரைப் பாகில் இருந்து கணிசமான அளவில் மின்சார இயக்கத்தை உண்டாக்கக்கூடிய ஒருவித சாராயம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

இது குறித்து இரண்டு பிரச்னைகள் எழுகின்றன. பொதுவாக அவைகள் பெரிதும் தடையாகவே இருக்கிறது. ஒன்று இவைகளுக்குத் தேவையான இயந்திரங்கள் இறக்குமதி செய்வதில் உள்ள தொல்லைகள், மற்றொன்று இந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான தொழில் நுணுக்கம் ஆகியவைகளாகும்.

ஆனால் இந்தத் தொல்லைகளுக்கு உடனடியாகப் பரிகாரம் தேடத் தவறிவிட்டால், ஏற்கனவே தொழில் துறையில் முன்னேறியுள்ள ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் இந்த மாநிலம் மிகவும் பிற்போக்கான நிலைக்குப் போய்விடும். எனவே மாநில சர்க்கார், மத்திய சர்க்காரிலிருந்து கிடைக்கக்கூடிய பதில்களைப் பதிவு செய்வதில் மட்டும் மன நிறைவு கொள்ளாமல், இந்த மாநிலத்திற்குத் தேவையான பொருள்களைப் பெறுவதில் உள்ள இறக்குமதி கட்டுப்பாட்டு விதிகளைத் - தளர்த்துவதற்கான விதிமுறைகளை வலியுறுத்த வேண்டும். வேற்று நாட்டுத் தொழில் நுணுக்க நிபுணர்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கு நாம் வெட்கப்படத் தேவையில்லை. குறிப்பாக ஜப்பான், மற்றும் தொழில்