பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

நுணுக்கத்தில் முன்னேறியுள்ள ஏனைய நாட்டுத் தொழில் நுணுக்க வல்லுனர்களைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

நீண்டகால திட்டத்தில் கடினமான உழைப்பின்மூலம் சொந்தத்தில் நம்முடைய தொழில் நுணுக்க வல்லுனர்களை உற்பத்திச் செய்வது என்பது எவ்வளவு சாத்தியமானதாக இருந்தாலும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய காலதாமதத்தின் மூலம் வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் நம்முடைய மாநிலத்தின் தொழிலபிவிருத்தியின் எதிர்காலத்தையும், முன்னேற்றத்தையும் தளர்த்தெறிந்துவிடக்கூடியதாக இருக்கக்கூடாது.

இது குறித்து தூதுவாலுவலகத்தின் மட்டத்தின் பல்வேறு நட்புறவு நாடுகளின் துணையை நாடிப்பெறவேண்டும்.

இந்த மாநிலத்தில் போதுமான மக்கள் சக்தியைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் கைத்தறித் தொழில்கள் இருந்தும், இன்னும் அவைகள் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது,

உதவி. தள்ளுபடி இன்னும் இதுபோன்ற அணைத்தும் இன்னும் நம்பிக்கை அளிக்கக்கூடிய நிலையிலேயே இருக்கிறது. இத்தொழிலை நிலைநிறுத்தக்கூடிய தேவைகள் என்ன என்பதைப் பார்க்கவேண்டும். மிகவும் பலம் வாய்ந்த வியாபாரப் பெருக்குடைய நிறுவனங்களின் தேவைகளுக்கான கைத்தறித்துணிகள் கிடைப்பதற்கான உத்தரவாதம் இருக்கவேண்டும்.

நம்முடைய ஏற்றுமதி தேவையான அளவுக்குத் தற்போது இல்லை. அவ்வப்போது ஏற்படக்கூடிய அதிர்ச்சிகளிலும், இக்கட்டுகளினாலும் இத்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிகுக்கிறது. அமெரிக்கர்களுக்குத் தேவையான கைத்தறி ஆடைகள் எதிர்காலத்தில் நம்பிக்கையூட்டுவனவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

பெருமளவில் அந்த நாட்டின் தேவையிருப்பதால், இந்தத் தொழில் மாநில ரீதியில் மேற்கொள்ளப்படுமேயானால் இத்தொழிலுக்கு நல்லதோர் எதிர்காலம் இருக்கிறது என்று எண்ணம் எழுவது இயற்கையின் பாற்பட்டதாகும். உத்பத்தியைப் பொறுத்த வரையில் தனிப்பட்டவர்களிடத்திலும் அல்லது கூட்டுறவு நறுவனங்களிடத்திலும் ஒப்படைக்கப்பட்டாலும், அவைகளை ஏற்றுமதி செய்யும் பொறுப்பு முழுவதும் மாநில சர்க்காரின் தலையாய கடமையாக இருக்கவேண்டும்.