பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

யில் முயற்சிக்கப்படுமானால் தற்போது பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படும் தோல் இங்கேயே தேக்கவைத்து பெருமளவில் மக்கள் சக்தியையும் பயன்படுத்தி இலாபம் தரக்கூடிய தொழிலாக மாற்றி அமைக்க முடியும்.

கம்பள ஏற்றுமதியும் கவனம் செலுத்தவேண்டிய மற்றொரு பொருளாகும். மிகப் பழைய முறைகளைக் கையாள்வோரிடத்தில் இந்தத் தொழில் தற்போது இருந்துவருவதால் மிகவும் பிற்போக்கான நிலையில் இருக்கிறது. தொழில் நுணுக்க ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. என்றாலும் உருப்படியான மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஏற்றுமதிப் பொருளாக இருக்கின்ற காரணத்தால் இது விஷயத்தில் அதிகமான கவனம் செலுத்தவேண்டும்.

இந்த தொழிலும் இன்னும் இதுபோன்ற ஏனைய தொழில்களுக்கும் மாநில சர்க்கார் உதவி வழங்குகிறது என்றாலும் இன்னும் அதிகப்படியான பயன் கிடைக்கவேண்டுமானால் கிடைத்து வரும் நிதி உதவிகள் ஏதோ அடையாளமாக அளிக்கின்ற தன்மையில் இல்லாமல் மனப்பூர்வமான முயற்சிகள் முழு அளவில் எடுத்துக்கொள்ளவேண்டும். பத்துப் பதினைந்து ஆண்டுகளில் அதிக வருவாய் அளிக்த்தக்க வகையில் திட்டமிட்டு செயலாற்றவேண்டும்.

மிகப் பலவற்றை அடைவதற்கு ஒரு சிலவற்றையாவது நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். சிலவற்றை அடைவதற்கு பலவற்றை நாம் நேரக்கிப் பார்க்கவேண்டும்.

இப்பிரச்சினைகளை நிபுணர் குழு ஒன்று ஆராய்ந்து பார்த்து இந்த மாநிலத்தின் தனிச்சிறப்பாக விளங்கத்தக்க வகையில் ஒரு தொழிற்சாலை அமைக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த தொழிற்சாலைக்கு மாநில சர்க்கார் போதுமான நிதியுதவியளிக்க முன்வரவேண்டும்.

எல்லாப் பிரச்னைகளையும் பரிசீலிப்பது என்பதுதான் இன்றைய நடைமுறையாக இருக்கிறது. ஆனால் அவையனைத்தும் ஒரு குறிப்பிட்ட மட்டத்தோடு நின்று விடுகிறது.

சாதாரணமானதன்றி திட்டமிட்டபடி பட்டியலில் இடம் பெற தங்களுக்கேற்ற வகையில் பல்வேறு விதமான தொழிற்சாலைகளை சின்னஞ்சிறிய நாடுகள் பல