பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

உருவாக்கியிருக்கின்றன. எனவேதான் அந்த நாடுகள் அனைத்தும் வெகுவாக முன்னேற்றம் கண்டிருக்கிறது. கடிகாரத்தொழிலில் சிறந்து விளங்கும் ஸ்விட்சர்லாந்தும், பால் பண்ணைத் தொழிலில் புகழ்பெற்று விளங்கும் டென்மார்க்கும் அளவில் சிறியது என்றாலும் பலம் பொருந்திய இந்த நாடுகள் மிகப்பெரிய தங்கள் தொழிலின் மூலம் உலக நாடுகளின் வாணிபச் சந்தையைப் பெருமளவில் கைப்பற்றியிருக்கிறன.

தோட்டங்களில் உற்பத்தியாகும் காப்பி, தேயிலை, ரப்பர், வாசனைத் திரவியங்கள் ஆகியவைகள் அன்னியச் செலாவணியை ஈட்டித் தரத்தக்கனவாக இருக்கிறது. ஆனால் அவைகள் அனைத்தும் தனிப்பட்டோர் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. அவைகள் நல்ல வரிதரக்கூடிய நிறுவனங்களாகவே சர்க்கார் கருதிக்கொண்டிருக்கிறது.

இந்தப் பொருள்கள் அனைத்துக்கும் ஏற்றுமதிக்கான நல்லதோர் எதிர்காலம் இருப்பதால், தனியார்துறை ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி நல்லதோர் திட்டத்தின் மூலம் மாநில சர்க்கார் நிர்வாகத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

ஆனால், திட்டங்களை உறுவாக்கவும், நிறைவேற்றவும் அதிகாரம் பெற்றிருக்கும் கட்சி தனியார் துறையின் இன்றியமையாத தேவையில் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஏனைய கட்சியினர் இக்கருத்தினை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

இன்றையத்தினம் பெருமளவில் விவசாயத்தையே நம்பிக்கொண்டிருக்கிற காரணத்தால், இந்த மாநிலத்தைத் துரிதமாகத் தொழில் மயமாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. விவசாயத்தையே பெருமளவில் நம்பிக்கொண்டிருக்கும் நிலைமைமாறி தொழில்துறை விரிவான முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டாலொழிய எந்த நாடும் முன்னேற்றமடைய முடியாது.

ஆனால் விவசாயத்தையே சுழன்று கொண்டிருக்கும். பொருளாதார நிலைமை மாற்றமடைவதற்கு நீண்டதோர்