பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

காலம் பிடிக்கும்போது முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் விவசாயம் மட்டுமே பெரியதோர் தொழில் வளமாக வளர்ச்சியடைந்துள்ள போது, இங்கே மட்டும் எல்லாவிதமான நடைமுறை உபயோகத்திற்கும் அது ஒரு பரம்பரை பாத்யதையாக இருந்து வருகிறது.

இத்துறையில் அதிக நாட்டம் செலுத்தப்பட்டது. ஆனால் கருத்துவேறுபாடுகளும், எதிரிடையான எண்ணங்களும் உருவானதால் முன்னெற்றத்தின் வேகம் தடைபட்டுவிட்டது.

நாட்டின் உணவுப் பற்றாக்குறையை நிறைவு செய்வதே இரண்டு திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. பெருந்தொகை செலவழிக்கப்பட்டது, திட்டங்கள் பல உருவாக்கப்பட்டது. ஆனால் பத்தாண்டுகள் கழித்தும் கூட பழைய நெருக்கடியும் புதிய ஆபத்துக்களும் உணவுக்கட்டத்தை முற்றுகையிட்டுக்கொண்டே இருக்கிறது.

உணவு உற்பத்தியைப் பெருக்க மாநில சர்க்கார் மனப்பூர்வமான முயற்சிகள் எடுத்துக்கொண்டு வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கின்றனர். ஆனால் விவசாயம் தொடர்புள்ள அடிப்படைக் கொள்கைகளைப் பொறுத்தவரையில் ஒரே சீரான துணிவான நடவடிக்கைகள் ஏதும் சர்க்கார் மேற்கொள்ளவில்லை.

மிகச்சாதாரணமான நில உச்சவரம்பு இத்துணை ஆண்டுகளாக அரசியல் பேச்சுக்குரியதாகவே இருக்கிறது. நிலை உச்சவரம்புதான் செய்யப்படவேண்டியதோர் மிகக் குறைந்த பொருளாதார நிபுணர்களும் தத்துவமேதைகளும் ஒரே சேர சுட்டிக்காட்டியிருக்கின்றனர். எனினும் நில உச்சவரம்பு சட்டமானது இன்னும் அது தனது உண்மை உருவத்தை அடையவில்லை.

இந்தச் சிறு சட்டத்தை உருவாக்க காலவரையின்றிய இந்தக் காலதாமதம் அவர்களது முன்னேற்பாடான திட்டத்தின் பிரதிபிம்பமாகத் திகழ்கிறது என்பதை அறி-