பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

விப்பதற்குப் போதுமான எடுத்துக்காட்டாகவே அமைந்திருக்கிறது.

புரட்சிகரமானதோர் மாற்றங்கள் வெறித்துக்கிளம்புவதற்கான வழிவகைகள் நம்பிக்கையூட்டுவனவாக இருக்கிறது.

அதனுடைய வலிவும் பொலிவும் தகர்த்தெறியப்பட்பட்டாலும் இன்றைய நிலையில் கூட இந்தச்சட்டம் விவசாயத்துறை சீரமைப்பிற்கான திட்டங்கள் தீட்டுவதற்கு இன்றியமையாத ஒரு தேவையாக இருக்கிறது.

" உழுபவனுக்கே நிலம் " என்ற வார்த்தை திறைமறைவுக்குத் துறத்தப்பட்டுவிட்டது. பங்கீட்டுக்கு ஏற்றதோர் தீவிரமான திட்டம் என்று சொல்லக்கூடிய நிலை மாறி அதிக உற்பத்தி செய்யவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.

நிலவளம், முயற்சி ஆகியவைகளைப் பொறுத்தே உற்பத்திப் பெருக்கம் இருக்கிறது. முறைகள் மாற்றத்திற்கேற்ப முயற்சியின் மூலம் மட்டும் பல்வேறு பயனை அடையலாம்.

உற்பத்திப் பெருக்கத்திற்கு இயந்திர சாதனம் கொண்ட விவசாயம் நல்லதோர் முறை என்று பேசப்பட்டு வந்தாலும் தொழில் நுணுக்கம் தெரியாத தொழிலாளர்களும், விவசாயிகளும் மிகுதியாக இருக்கும் இந்த மாநிலத்தில் இந்த முறை சாத்தியமான தல்ல. தலைமுறை காலமாக விவசாயத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களின் தொகை கணிசமான அளவிற்கு இருக்கிறது.

பெருவாரியான விவசாயத் தொழிலாளர்கள் இந்த மாநிலத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு 115 நாட்கள் வேலையின்றி கெஷ்டப்படுகின்றனர் என்றும், அத்துடன் அவர்கள் பெறும் ஆண்டு வருமானம் இந்தியாவில் ஏனைய

மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது.