பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

எனவே இந்தப் பிரச்சினை இரண்டு உண்மைகளை உள்ளடக்கியிருக்கிறது.

உற்பத்தியையும் பெருக்கவேண்டும். அதே நேரத்தில் விவசாயியின் வருமானத்தையும் உயர்த்தவேண்டும்.

உபயோகிப்பவர்களை எந்த வழியிலும் பாதிக்காத வகையில் இதைச் செய்தாகவேண்டும். சிக்கல் நிறைந்த பிரச்சினை தான் என்றாலும் உபசாரமான வார்த்தைகள் தேவையில்லா ஒன்று. மேலும் குழப்பமான எண்ணங்கள் மேலும் விபரீதத்தையே உண்டாக்கும்.

அரசியல் உலகத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் அவ்வப்போது இதுபற்றி வழங்கிவரும் கருத்துக்கள் எத்தகைய குழப்பமான நிலைமை நிலவிவருகிறது என்பதையே காட்டுகிறது.

நில உச்சவரம்பு சட்டத்தோடு மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைத் துவக்கவேண்டும்.

பல இலட்சக்கணக்கானவர்கள் உள்ளத்தில் குறைந்தது அமைதியான ஆர்வத்தை உண்டாக்குவதற்குப் பயன்படும்.

வாழ்க்கைத்தரம் சாதாரண மனிதன் சக்திக்கு எட்டிய வகையில் இருக்கச் செய்ய அத்தியாவசியத் தேவைப்பொருள்களின் விலைவாசிகள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதாக இருக்கவேண்டும் என்ற பிரச்சினை ஆளும் கட்சியினர், அரசியல் வாதிகள், பொருளாதார நிபுணர்கள், விவசாயிகள், அத்தியாவசியப் பொருள்களைப் பயன்படுத்துவோர்களின் பிரதிநிதிகள் ஆகிய அனைவருடையவும் கருத்தோட்டமாக இருக்கவேண்டும்.

நம்பிக்கைக்கு ஒவ்வாத வகையில் உற்பத்திப் பெருகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் உணவுப்பண்டங்களின் விலைவாசிகளும் உயர்ந்துவிட்டது.

இந்தத் தத்துவம் வியக்கத்தக்கதுமட்டுமல்லாமல் ஆபத்தானதும் கூட.