பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

ஏரிகளையே நாம் அதிகம் நம்பிக்கொண்டிருக்கிற காரணத்தால், ஏரிகளைப் பழுதுபார்க்கவும், ஆழப்படுத்தவுமான காரியங்களுக்காகச் செலவழிக்கப்படும் தொகை கணிசமான அளவிற்கு உயர்த்தப்படவேண்டும். வேலைமுறைகளையும் துரிதப்படுத்தவேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

மதிப்பீடுகள் தயாரிக்கவும், அநுமதி வழங்கவும், அநுமதி வழங்கப்பட்டவைகள் நிறைவேற்றப்படுவதிலும் ஏற்படும் காலதாமதம் கிராம மக்களின் அளவு கடந்த பொருமையை சோதிக்கும் தன்மையிலேயே இருக்கிறது. மாநில சர்க்கார் அதனுடைய வேலைமுறைகளைத் தீவிரப்படுத்தவேண்டும்.

மாநிலத்தில் உள்ள 23,000 ஏரிகளில் 4,000 ஏரிகள் தான் இதுவரை கவனிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் பல ஏரிகள் கவனிக்கவேண்டிய நிலையில் உள்ளன. மேலும் இத்துறையில் வழக்கமாக நடைபெறுவதைப்போன்றில்லாமல் அவசரகாலத் திட்டமாகக் கருத்தில்கொண்டு வேலைமுறைகளைத் துரிதப்படுத்தவேண்டும்.

ஏரிகள் மட்டுமின்றி நீர்ப்பாசனக் கால்வாய்களும் உடனடியாகக் கவனிக்கத்தக்க நிலையில் உள்ளன.

இந்த வேலைகளை நிறைவேற்ற இராணுவத்தினரின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த வேலைகளுக்கு பிரத்தியேகமான இயந்திரங்களை தேவையை வற்புறுத்திப் பெற்று பயன்படுத்தவேண்டும்.

அப்படி இருந்தபோதிலும் சிறு தீர்ப்பாசன திட்டத்தின் இலட்சியத்தை நாம் அடையக்கூடும். கிருஷ்ணா, கோதாவரி, கிருஷ்ணா-பெண்ணார் போன்ற மாநிலங்களின் நீர்ப்பாசன திட்டம் கேரள மாநிலத்தில் உள்ள ஆறுகளின் தண்ணீரைக் கொண்டு வருதல் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலொழிய நாம் திக்கற்றவர்களாகிவிடுவோம்.

பிரத்தியேகமான இந்த திட்டங்களை உருவாக்க, தொழில் நுணுக்கம் பெற்ற பிரத்தியேகமான நிபுணர் குழு ஒன்றினை அமைக்கவேண்டும்.