பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

ஏற்கனவே அதிகப்படியான வேலைகளில் ஈடுபட்டுள்ள நிர்வாக இயந்திரத்திடம் இந்தப் பிரக்சினையை ஒப்படைப்பதானது காலதாமதத்தையே உண்டாக்கும்.

மாநிலத் தண்ணீர்த் திட்டங்களை பிராந்தியக் குழு ஒன்றிடத்தில் ஒப்படைப்பதே கண்ணுக்குப் புலப்படும் சிறந்த வழியாகும். மேலும் முடிந்தால் பலதரப்பட்டவர்கள் கொண்ட குழு ஒன்றினை நியமிக்கலாம்.

மூன்றாவது திட்டத்தில் இதற்கு முதலிடம் அளிக்க வேண்டும்.

அண்டை நாடுகளின் மாநில முதல்வர்கள் உதவி புரிவதாக ஏற்கனவே வாக்களித்துள்ளதால் இந்தத் திட்டத்தைத் தீட்டுவதில் எவ்வித காலதாமதமும் கூடாது.

மாநில சர்க்கார் இதை வற்புறுத்தி இதற்காக நிதி ஒதுக்குவதற்கான வழிவகைகளைக் காணவேண்டும்.

விஞ்ஞான உதவியின் மூலம் பாலை வனங்களையும், காடுகளையும் வளமுள்ள விளைநிலங்களாக மாற்றுகின்ற நாடுகளை நாம் பார்க்கும்போது, தண்ணீர் பயனற்றுப் போகும் கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகளின் மித மிஞ்சிய தண்ணீரை நாம் கொண்டுவருவதென்பது நம்முடைய சக்திக்கப்பாற்பட்டது என்று நாம் சிறிதும் எண்ணக்கூடாது.

தண்ணீர் ஆவியாக மாறி வீணாவதைப்பற்றி அடிக்கடி பேசப்படுகிறதே தவிர அதனை தடுக்க முற்படவில்லை.

கட்டுப்பாடுகள் பெருமளவு அதிகாரிகளின் பயிற்சிக்கு விடப்பட்டிருக்கிறது. இத்தகை பிரச்சினைகளும், கிராம புணர்வாழ்வு, குடிசைத் தொழில்கள், சமூக முன்னேற்றம், எல்லாம் வட்டார வளர்ச்சி துறையின் பொறுப்பில் இருக்கின்றன. செலவிடப்படும் தொகைகளுக்குஏற்ற பலனை ஈடாக காண முடியவில்லை. மேலும் இந்தத் துறை அரசியலுக்கு ஆட்பட்டிருப்பதும் மறுக்க

இயலாது.