பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பொது மக்களின் கவனத்தை ஈர்த்து,அவர்களின் ஆதரவை திரட்ட, இத்துறைக்கான வழிகளை திட்டக்குழு ஆராயவேண்டும். இந்த வட்டார வளர்ச்சித் துறை நாளுக்கு நாள் சிறப்பைப் பெற்று வருகிறது.

மேலும், சாலை அமைப்பு, நில மீட்பு, புறம்போக்குகளை பயன்படுத்துதல், போன்ற காரியங்களை மேற்கொள்ள ஒரு 'நிலப்படையை' அமைப்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. இதில் கட்டாயப்படுத்துவதோ, வற்புறுத்துவதோ தேவையற்றது. மாநில அரசு முகாம்களை அமைத்து, அதற்கான செலவுகளை ஏற்று, படையை திரட்டவேண்டும். இதன்மூலம் ஓரளவிற்கு வேலையில் லாத திண்டாட்டத்தையும் போக்க முடியும். விரைவாக முன்னேறவும் வழி ஏற்படும்.

இந்த யோசனைகளுக்கு ஆதாரமாக புள்ளி விவரங்கள் தரப்படவில்லை என்பது உண்மை. அதனால் புள்ளி விவரங்கள் தேவையில்லை என்பதல்ல. சீராக சரியான புள்ளி விவரங்களை பதவியிலிருப்பவர்கள் பெற வழி இருப்பது சாதாரணமாக புலப்படும் உண்மை.

அந்த புள்ளி விவரங்களை நன்னோக்குடன் தரப்பட்ட யோசனைகளை கேலி செய்வதற்கு பயன்படுத்தாமல், துவக்க நேரத்தில் ஏற்படக்கூடிய இன்னல்களையும் பொருட்படுத்தாமல் நல்ல திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக ஆலோசனைக் குழுக்களை அமைத்து, குறிப்பிட்ட திட்டங்களை ஆட்சியிலிருப்பவர்களும், நிபுணர்களும் கலந்துப் பேசி முடிவுகளை மேற்கொள்ள முனைய வேண்டும்.

இரண்டு முக்கியமான விஷயங்களை நினைவில் கொள்ளவேண்டும்.

திட்டங்களின் நோக்கம் நன்மையை அடிப்படையாகக்கொண்டவை என்கிற உணர்வு ஏற்படும்போது, மக்களிடையே ஆர்வம் எழும். இலாபமே நோக்கம் என்கிற எண்ணம் தொழிலாளரிடம் ஏற்படுமானால், உற்சாகம்